இம்சையா.. பட்டப் பெயர் வைத்த அபிஷேக் ராஜா.. லோக்கல் ஸ்லாங்கில் ஏறிவிட்ட கானா இசைவாணி!
சென்னை: தனக்கு இம்சை என பட்டப் பெயர் வைத்த அபிஷேக் ராஜாவை கானா பாடகியான இசைவாணி ஏறிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் நேற்று இந்த சீசனின் முதல் நாமினேஷன் நடைபெற்றது.
இதில் தாமரை செல்வியையும் பாவனி ரெட்டியையும் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷன் புராசஸ்ஸிற்கு நாட்மினேட் ஆகியுள்ளனர்.

இன்றைய முதல் புரமோ
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் நடியா சங்கை, பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான வனிதா விஜயக்குமாருடன் ஒப்பிட்டு பேசினார் அபிஷேக் ராஜா. இதேபோல் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் ரிவ்வியூ கொடுத்தார்.

இன்றைய இரண்டாவது புரமோ
இதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவில் பிரியங்கா நிரூப், அபிஷேக் ராஜா ஆகிய மூன்று பேரும் கேங்காக அமர்ந்து குரூப் குறித்து பேசினர். பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் குறித்து அவர்கள் பேசியதாக தெரிந்தது.

பெயருக்கு முன்னால் அடைமொழி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் அபிஷேக் ராஜா, எல்லாருக்கும் ஒரு அடைமொழி வைக்கலாமா என கேட்டு ஒவ்வொரு போட்டியாளரின் பெயருக்கு முன்பும் ஒரு அடைமொழியை கூறுகிறார்.

இம்சை இசைவாணி
பாவம் பாவனி, நெருப்பு நிரூப்பு, அசால்ட் அக்ஷரா, தலைவி தாமரை, வவ்வால் வருண், இம்சை இசை என கூறுகிறார். அபிஷேக் ராஜாவுடன் நிரூப்பும் ஒத்து ஊதுகிறார். அப்போது பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த இசைவாணி அபிஷேக் கூறுவதைக் கேட்டு என்னா பிரச்சனை உனக்கு என நார்த் மெட்ராஸ் ஸ்லாங்கில் ஏறி வருகிறார்.

கொத்தமல்லி மண்டை
என்ன பார்த்தா மட்டும் உனக்கு என்ன ஏறுது? என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது என்றும் விளாசுகிறார். இதனைக் சற்றும் எதிர்பாராத அபிஷேக் ராஜா, என்ன சும்மா துரத்தினு வர கொத்தமல்லி மண்டை என இசைவாணியை கலாய்க்கிறார். அதற்கு இசைவாணி என்னா துரத்தினு வந்தாங்க என பதிலுக்கும் சென்னை செந்தமிழில் வச்சு வாங்குகிறார்.

உட்டன் வச்சுக்கோ..
மேலும் உட்டன் வச்சுக்கோ என்றும் அபிஷேக் ராஜாவை மிரட்டுகிறார் இசைவாணி. இப்படியபாக உள்ளது இன்றைய எபிசோடின் மூன்றாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் அபிஷேக் ராஜாவுக்கு வாய் அதிகமாகிக் கொண்டே போகிறது என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











