பிக்பாஸ் வீட்டில் சின்னப்பொண்ணு விவகாரத்தை ஊதி பெரிதாக்கிய பிரியங்கா.. முகத்தை காட்டிய அபிஷேக்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டத்தின் போது சின்னப்பொண்ணு அப்செட்டான விவகாரம் பிக்பாஸ் வீட்டில் விடிய விடிய பிரச்சனையானது.

பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டத்தின் போது சின்னப்பொண்ணு அப்செட் ஆனார். வயதில் மூத்தவரான தன்னை முதலில் பாட கூப்பிடவில்லை என்று குறைபட்டார்.

நேற்று எபிசோடிலேயே இந்த விவகாரம் முடிந்ததாக காட்டப்பட்ட நிலையில் நள்ளிரவிலும் பிக்பாஸ் வீட்டில் அந்த பிரச்சனை தொடர்ந்தது.

பிரச்சனையை பெரிதாக்கிய பிரியங்கா

பிரச்சனையை பெரிதாக்கிய பிரியங்கா

அணைந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்கினார் பிரச்சனையை. அந்த பிரச்சனையை யாரும் கண்டு கொள்ளாத போதும் பிரியங்கா வாண்ட்டடாக போய் அனைத்து போட்டியாளர்களிடமும் அதை பற்றியே பேசினார். குறிப்பாக சின்னப்பொண்ணு மீது தவறு உள்ளது போல் காட்ட முயற்சி செய்தார் பிரியங்கா.

அபிஷேக்கின் பர்ஃபாமன்ஸ்

அபிஷேக்கின் பர்ஃபாமன்ஸ்

அபிஷேக், அண்ணாச்சி என பலரிடமும் சின்னப்பொண்ணு இப்படி செய்திருக்க கூடாது என நெகட்டிவ் இம்ப்ரஷனை கொண்டு வர முயற்சி செய்தார். அதற்கு மேல் அபிஷேக்கின் பர்ஃபாமன்ஸ்.. வாய்க்கு வந்ததை எல்லாம் உளறினார் அபிஷேக்.

என் ஆத்தாக்கிட்ட மன்னிப்பு

என் ஆத்தாக்கிட்ட மன்னிப்பு

பெட் ரூம்மில் அமர்ந்திருந்த சின்னப்பொண்ணுவிடம், நிகழ்ச்சி அப்படிதான் பிளான் பண்ணப்பட்டது, ஆனால் இப்படி நடந்து விட்டது என விளக்கம் கொடுத்தார். மனசு கஷ்டப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் கூறினார். மேலும் ஒரு மகனாதான் உங்கக்கூட பேசுகிறேன் என்ற அபிஷேக், ஆத்தாக்கிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறதுல ஒன்னும் இல்ல என்றார்.

கத்தி பேசிய அபிஷேக்

கத்தி பேசிய அபிஷேக்

சின்னப்பொண்ணுவிடம் குரலை உயர்த்தியும் கத்தியும் பேசினார் அபிஷேக். இதனை பார்த்த அக்ஷரா ஏன் இப்படி கத்துகிறீர்கள்? அவரின் வயசுக்கு மரியாதை கொடுங்கள் என்றார். இதனால் டென்ஷனான அபிஷேக் எனக்கு என் ஆத்தாக்கிட்ட எப்படி பேசணும்னு தெரியும் என்றும் பதிலுக்கு கத்தினார்.

பரத நாட்டியம் ஆடப்போகிறேன்

பரத நாட்டியம் ஆடப்போகிறேன்

மேலும் உங்களுக்கு என்கூட ஒத்து வரலன்னா வந்து பேசலாம் என்றும் அக்ஷராவுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஹவுஸ்மேட்டுகளிடம் போய் பேசிய அபிஷேக் தான் இன்று ஒரு பரத நாட்டியம் ஆடப்போவதாகவும் தனக்கு எதுவும் ஆனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் ராஜுவிடம் கூறி பார்வையாளர்களின் வாய்க்கு அவல் ஆனார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X