வனிதா அக்காவா? பெண் போட்டியாளர்களை விமர்சனம் செய்யும் அபிஷேக்.. வெளியானது இன்றைய முதல் புரமோ!

சென்னை: சினிமா விமர்சகரை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்தால் என்ன நடக்கும் என்பதை அனுதினமும் நிரூபித்து வருகிறார் நம்ம சினிமா பையன் அபிஷேக் ராஜா.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பலமே அதன் புரமோக்கள் தான். இன்றைய முதல் புரமோவில் மீண்டும் போட்டியாளர்களை அபிஷேக் ராஜா விமர்சனம் செய்யும் காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளன.

இந்த முறை பெண் போட்டியாளர்களை விமர்சனம் செய்யும் அபிஷேக் ராஜா நதியா சங்கை வனிதா விஜயகுமாருடன் ஒப்பிட்டு பேசியது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதே பொழப்பு

இதே பொழப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்தே அபிஷேக் ராஜா சக போட்டியாளர்களை விமர்சனம் செய்யும் வேலையை மட்டும் தான் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு அவரது காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில், இன்றைய முதல் புரமோவிலும் அபிஷேக் ராஜாவின் விமர்சனத்துடனே இன்றைய தினம் ஆரம்பமாகி உள்ளது.

பெண் போட்டியாளர்களை பற்றி

பெண் போட்டியாளர்களை பற்றி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பெண் போட்டியாளர்கள் சிலர் குறித்து அபிஷேக் ராஜா விமர்சனம் செய்யும் முதல் புரமோவில் அவர் நதியா சங், இசைவாணி, ஐக்கி பெர்ரி மற்றும் பாவனி ரெட்டியை எடை போட்டு விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு இமான் அண்ணாச்சி கை தட்டுவது எல்லாம் ரொம்பவே ஓவர் என பிக்பாஸ் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

வனிதாவுடன் கம்பேர்

வனிதாவுடன் கம்பேர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு கலக்கிய வனிதா விஜயகுமார் உடன் நதியா சங்கை ஒப்பிட்டு செம பில்டப் கொடுத்துள்ளார் அபிஷேக் ராஜா. வனிதா அக்கா அளவுக்கெல்லாம் அவங்க வொர்த் இல்லை அபிஷேக் உங்க விமர்சனம் தப்பு என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு தாளித்து வருகின்றனர்.

வினோத பிறவி

வினோத பிறவி

ஐக்கி பெர்ரி யார் கூடவும் கனெக்ட் ஆகாத ஒரு ஆள்.. அவரை ஒரு வினோத பிறவியா பார்க்குறேன்னு ரொம்பவே தரக்குறைவாக அபிஷேக் ராஜா விமர்சித்துள்ளார் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். அபிஷேக் உடன் தான் மழையில் அவர் விளையாடி மகிழ்ந்ததை எல்லாம் மறந்து விட்டார் போல என்றும் திட்டி வருகின்றனர்.

பாவனி ஏன் வரல

பாவனி ஏன் வரல

பாவனி ஏன் நாமினேஷனுக்கு வரலைன்னா அவங்களோட கதை ரொம்ப பாதிப்பை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தி உள்ளது என இந்த முதல் புரமோவில் அபிஷேக் ராஜா பாவனி பற்றியும் ஜோஷியம் சொல்ல, அடுத்ததாக அவர் இசைவாணி பற்றியும் விமர்சித்து உள்ளார்.

அடிக்கடி காட்டுறாரு

அடிக்கடி காட்டுறாரு

இசைவாணி பற்றி புரமோவின் இறுதியில் விமர்சிக்கும் அபிஷேக் ராஜா அந்த பொண்ணுக்குள்ள ஒரு சோகம் இருக்கு.. ஆனால், அதை அடிக்கடி சொல்லி காட்டுறாரு.. சாதாரணமா ஒரு மேட்டர் பேசினா கூட எங்க வீட்ல ஃப்ரிட்ஜ் கிடையாதுன்னு சொல்றாருன்னு இசையின் வலியை எள்ளி நகையாடுவதை ரசித்து இமான் அண்ணாச்சி பாராட்டுவதெல்லாம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் அடுத்த சண்டை ஆரம்பம் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X