சஞ்சீவின் அக்கா பிரபல நடிகையா?... கடந்து வந்த பாதையில் சுவாரசியத் தகவல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 பேட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
Recommended Video
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிஇன்றும் 4 வாரங்களில் முடிவடைய உள்ளது.
கடந்த வந்த பாதை டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து பேசியது போல இன்று சஞ்சீவ் பேசினார்.

சஞ்சீவ்
இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அவரது சகோதரி பற்றியும் அவரும் ஒரு நடிகை தான் என்பது பற்றியும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்து வந்த பாதை
நேற்று நடைபெற்ற கடந்து வந்த பாதையில் தனது அக்கா பெயர் சிந்து அவரும் ஒரு நடிகை என்றார். என் அக்கா தான் எனக்கு எல்லாமாக இருந்தார்கள். என்னை படிக்க வைத்தார்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அக்காவால் தான் கிடைத்தது என்றார்.

கண்கலங்கிய சஞ்சீவ்
என் அக்காவுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால்,திடீரென ஒருநாள் இருந்து விட்டார். அக்கா இறக்கும் போது அவரது மகளுக்கு வெறும் ஒன்பது வயது தான் அப்போது முதல் அக்கா மகளுக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அவருக்கு திருமணம் செய்து வைத்தேன் என்று கண் கலங்கி கூறினார். ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தின் இயக்குனர் அஸ்வின் தான் சஞ்சீவின் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டவர்.

250க்கும் மேற்பட்ட படங்களில்
ரஞ்சீவின் அக்கா சிந்து வேறு யாரும் இல்லை இணைந்த கைகள் திரைப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்தவர்கள் தான். இவர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான ஷியாமளாவின் மகன் மற்றும் மகள் தான் சஞ்சீவ் மற்றும் சிந்து.


Click it and Unblock the Notifications











