பசங்க வேற.. பொண்ணுங்க வேற.. அமீரை கண்டித்த அக்ஷராவின் அண்ணன் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று 79வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணம் இந்த குடும்பங்கள் சந்திப்புதான். அனைத்து உறவுகளையும் விட்டு விட்டு 100 நாட்கள் அவர்களை நினைத்துக்கொண்டு இருப்பது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

Freeze டாஸ்க்
இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் துவங்குகிறது. முதல் ஆளாக அக்ஷராவின் தாயார் மற்றும் அவரது அண்ணன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தனர்.

குழந்தை போல அழுதார்
அவர்களை பார்த்த அக்ஷரா குழந்தைப்போல குதித்து குதித்த அழுதார். அவர்கள் இருவரையும் ஹவுஸ்மெட்டுகள் வரவேற்றனர். அக்ஷராவின் அண்ணான் நீ நல்லா விளையாடுற, நீ ஸ்ட்ராங் பிளேயர் ஸோ பயப்படாமல் விளையாடு என்று பல அறிவுரைகளை கூறினார்.

எனக்கு சாக்லேட்
அக்ஷராவின் அம்மா சாக்லேட் கொண்டு வந்து இருப்பதாக கூறினார். உடனே பிரியங்கா எனக்கும் சாக்லேட் இருக்கா என கேட்டக. உனக்கும் இருக்குமா என்று கூறி பிரியங்காவை அழைத்து முத்தமிட்டார். எல்லாரும் அம்மா ஞாபத்தில் இருப்பீங்க, யார் அம்மா வந்தா என்ன எல்லாரும் அம்மா தான் என்றார்.

அண்ணன் அட்வைஸ்
அக்ஷராவின் அண்ணா அவருக்கு தொடர்ந்து பல அறிவுரைகளை கூறினார். 80 நாட்கள் அம்மா ,அண்ணன் இல்லாம இருத்துவிட்டாய் உன்னால் எல்லாம் முடியும் நிச்சயம் நீ ஜெயிப்பாய் என்றார். நான் உன்னை எப்படி பார்த்துக் கொள்வோனோ அதேபோல, ராஜூ உன்னை பார்த்துக்கொள்கிறார் என்றார். அதே போல வருண் உனக்கு நல்ல நண்பர் என்றார்.

பார்த்துவிளையாடுங்க
இதையடுத்து, அக்ஷராவின் அண்ணன், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முன்பு அமீரை பார்த்து பசங்க வேற, பொண்ணுங்க வேற பார்த்து விளையாடுங்க என்று கூறிவிட்டு சென்றார். அமீர் பாவனியிடம் நடந்து கொண்ட முறையால் பலரும் அவர் மீது கோவத்தில் இருக்கும் போது அக்ஷராவின் அண்ணன் இப்படி கூறி இருப்பது அவருக்கும் அமீரை பிடிக்கவில்லை என்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











