twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குட்டி ஸ்டோரியை கூறி கண்ணீர்விட்டார் அக்ஷரா ரெட்டி.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க் இந்த வாரமும் தொடருகிறது.

    சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!

    இந்நிலையில் இன்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி தனது கதையை பகிர்ந்து கொண்டார். தனது வாழ்க்கையில் சந்தித்த ஹீரோக்கள் என்று கூறி பேச தொடங்கிய அக்ஷரா ரெட்டி, தனது அப்பா குறித்து பேசினார்.

    எழுப்பினேன்.. அப்பா எழுந்திரிக்கல..

    எழுப்பினேன்.. அப்பா எழுந்திரிக்கல..

    அவர் பேசியதாவது, என்னுடைய அப்பா ஐஐடி கோல்டு மெடலிஸ்ட். எனக்கு 8 வயசு இருக்கும் போது என் அப்பா இறந்துட்டார். என் அப்பாவும் என் அண்ணாவும் காரில் ஃபேக்டரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மயங்கி விட்டார். அப்பா விளையாடுகிறார் என்று நினைத்துவிட்டார் அண்ணன். எழுப்பியும் அப்பா எழுந்திரிக்காததால் அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர்.

     வர மாட்டார் என்று தெரியாது

    வர மாட்டார் என்று தெரியாது

    அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள் பல்ஸ் இல்லை என்று கூறிவிட்டனர். வீட்டிற்கு கொண்டு வந்து படுக்க வைத்திருந்தார்கள். எனக்கு அப்பா இறந்து விட்டார் என்று தெரியவில்லை. அவரை எழுப்பிக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் எழுந்திரிக்கவில்லை. அவர் வர மாட்டார் என்று எனக்கு தெரியாது.

    அப்பாதான் முதல் ஹீரோ

    அப்பாதான் முதல் ஹீரோ

    அப்பாவோட ஃபேவரைட் நான். ரொம்ப வருஷம் வேண்டி பிறந்த பெண் நான். 2, 3 வருஷம் கழித்துதான் வாழ்க்கைன்னா இதான் அப்படின்னு புரிஞ்சுது. அப்பா இனிமே வரமாட்டாருன்னு புரிஞ்சுது. அப்பாதான் என்னோட முதல் ஹீரோ. அப்பா போன பிறகு அவர் இல்லாத கஷ்டம் தெரியாமல் என் அண்ணன் என்னை வளர்த்தார்.

    அண்ணனுக்கு முதல் குழந்தை

    அண்ணனுக்கு முதல் குழந்தை

    இப்போதும் என் அண்ணன் என்னுடைய முதல் குழந்தை நீதான் என்று கூறுவார். என் அண்ணா என்னை என் அப்பா மாதிரி பார்த்துக் கொண்டார். இப்போ நான் என் அப்பாவ மிஸ் பண்றேன்னு சொன்னா நிச்சயமா என் அண்ணா ஃபீல் பண்ணுவார். என் அண்ணா என்னுடைய செகண்ட் ஹீரோ.

    குழந்தைகளுக்கு அப்பா கிடைக்கமாட்டார்

    குழந்தைகளுக்கு அப்பா கிடைக்கமாட்டார்

    என் அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க.. என் அம்மா இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை.. நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு கணவர் கிடைப்பார். என் குழந்தைகளுக்கு அப்பா கிடைக்கமாட்டார் என்று கூறி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை.

    அம்மாவுக்கு கிட்னி ஃபெயிலியர்

    அம்மாவுக்கு கிட்னி ஃபெயிலியர்

    என் வீட்டில் நான் என்ன சொன்னாலும் சரி என்பார்கள். நான் சொல்வதுதான் சரி என்று கூறுவார்கள். எனக்கு மாடலிங்கில் இன்ட்ரெஸ்ட். நான் கம்ஃபர்ட் ஸோனில் இருப்பதால் என்னால் பெரிதாக வளர முடியவில்லை. ஆனால் மாடலிங்கில் சாதிக்க தொடங்கிய போதுதான் அம்மாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஆனது தெரியவந்தது. எனக்கு ஒரு ரிககனைஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்.. என்று கூறி முடித்தார்.

    English summary
    Bigg boss Tamil 5: Akshara shares her past in Biggboss house. Akshara said that her father is her first hero.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X