Don't Miss!
- Sports
இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி
- Finance
2022-ல் வங்கி மோசடி மிக அதிகம், ஆனால் அதிலும் ஒரு மகிழ்ச்சியான தகவல்!
- Lifestyle
வறுத்த நிலக்கடலை Vs பச்சை நிலக்கடலை - இவற்றில் எது சிறந்தது?
- News
தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு தடை... 4 பேரை கைது செய்த காவல் துறை
- Technology
ISRO: 10 வயதுக்கு மேற்பட்டவர் சான்றிதழுடன் இலவச விண்வெளி பாடம் படிக்க வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த இடத்தில் பார்க்கத்தான் ஆசைபட்டேன்… அமீரை பார்த்து நெகிழ்ந்த வளர்ப்பு தந்தை !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்டு ஃபினாலே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் அமீரின் வளர்ப்பு தந்தை கலந்து கொண்டு மனம் நெகிழ்ந்து அவரை பாராட்டினார்.
பழைய சாதத்தை பரிமாறும் பிக் பாஸ்.. மீண்டும் மீண்டும் பயண வீடியோவா.. அட போங்க பாஸ் முடியல!

தெரியாத முகங்கள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த சீசனில், தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகமாக இருந்தனர்.

நடன இயக்குநர்
வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அமீர் தெரியாத முகமாக வீட்டிற்குள் நுழைந்தார். நடன இயக்குனரான இவர் ஊட்டியில் நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.

நேரடியாக இறுதி போட்டியில்
பிஸ் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக பாவனியின் பின்னால் சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டார் அமீர். கடந்து வந்த பாதையில் பேசிய அமீர், தனது 16வது வயதில், அம்மா கொலை செய்யப்பட்டு இறந்ததாகவும், ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தாகவும் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார். போட்டியில் மீது கவனம் செலுத்திய அமீர் நேரடியாக டிக்கெட்டு ஃபினாலே டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப்பேட்டிக்கு தகுதி பெற்றார்.

பெருமைப்படுகிறேன்
இதையடுத்து, தற்போது கிராண்ட் ஃபினாலேவில் கெத்தாக அமர்ந்து இருக்கிறார். இதையடுத்து, ஃபினாலேவில் அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் கலந்து கொண்டு அமீரை வாழ்த்தினார். இந்த இடத்தில் பார்க்கத்தான் நான் ஆசைபட்டேன். உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். வெளியில் வா உனக்கு மிகக்பெரிய எதிர்காலம் இருக்கிறது...வா சந்தோஷமாக வாழலாம் என்று மனம் நிறைந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து பாராட்டினார்.

கமலின் பரிசு
தன்நம்பிக்கையுடன் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்த 5 போட்டியாளருக்கும் கமல் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அதில், அமீருக்கு ஷூவை பரிசாக அளித்து மகிழ்வித்தார். இந்த ஷூவை போடமாட்டேன் ஃபிரேம்போட்டு வீட்டில் வைப்பேன் என்று மகிழ்ந்து கூறினார் அமீர்.