இந்த வாரம் நீரின் ஆளுமை... வருணுக்கு கூடுதல் பவர் கொடுத்த பிக் பாஸ் !

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணுவை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டனர்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்று மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்ப பாஸ் இன்றைய நிகழ்ச்சியில், நீரின் ஆற்றல் தொடங்கி உள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் காலையிலேயே தண்ணி கருத்துருச்சி பாடல் வேக்கப் பாடலாக ஒளிபரப்பானது.

நீரின் ஆளுமை

நீரின் ஆளுமை

நீர் நாணயத்தை வைத்திருக்கும் வருணுக்கு இந்த வாரம் வீட்டை ஆளும் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வருண் பாத் ரூம் ஏரியாவை இந்த வாரம் முழுவதும் ஆளுமை செய்து கொள்ளலாம். அவர் ஆட்சி செய்வதற்கு வசதியாக பாத்ரூம் அருகில் ஒரு சோபா போடப்பட்டுள்ளது.

சரியான தண்டனை

சரியான தண்டனை

பாத்ரூம் ஏரியாவை நடக்க வேண்டுமென்றாலும், பாத்ரூமிற்கு செல்ல வேண்டும் என்றாலும் வருண் கொடுக்கும் டாஸ்கை முடித்து விட்டு தான் செல்ல முடியும், அவ்வாறு சரியாக செய்யாத நபருக்கு தண்டனை கொடுக்கும் உரிமை அவருக்கு உண்டு. இது மட்டுமில்லாமல் பாத்ரூம் ஏரியாவில் தண்ணீரை பயன்பாட்டை எப்போது வேண்டுமானாலும் இவர் நிறுத்தி வைக்கலாம்.

ஏகப்பட்ட சலுகை

ஏகப்பட்ட சலுகை

பாத்ரூம் ஏரியாவில் தண்ணீர் நிறுத்தப்பட்டால், அனைவரும் கார்டன் ஏரியாவில் இருக்கும் பைபிள் தண்ணீரைப் பிடிக்க வேண்டும் அப்படி அந்த பைப்பில் தண்ணீர் வர வேண்டும் என்றால் அங்கே இருக்கும் சைக்கிளில் சைக்கிள் செய்து அங்கிருக்கும் பக்கெட்டில் பிடித்து மட்டுமே தண்ணீரை பயன்படுத்த முடியும், என நீர் நாணயத்தை வைத்திருக்கும் வருணுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

நிரூப் ஆளுமையின் போது வீட்டில் இருந்த அனைவரையும் ஒரு வழிப்படுத்தினார். ஆனால், கடந்த முறை பவானி ஆளுமை நடைபெற்ற போதும் , பவானியின் பேச்சை கேட்காமல் நிரூப் ஏடாகூடம் செய்தார். ஏற்கனவே வருணுக்கும் நிரூப்பிற்கும் பொம்மை டாஸ்கின் போது பஞ்சாயத்து ஆன நிலையில், வருணின் ஆளுமையின் போது நிரூப் எப்படி நடந்து கொள்வார் என்பதை பார்க்க பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X