அதே மாவு.. அதே தோசை.. அருங்காட்சியகமாக மாறும் பிக்பாஸ் வீடு.. இந்தவார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இதுதான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸ் மற்றும் இந்த வார கேப்டனுக்கான தேர்வு நடைபெற்றது. இதில சிபி இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவனி ஆகிய 9 பேர் எவிக்ஷன் புராசஸிற்கு தேர்வாகியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டின் கேப்டன்

பிக்பாஸ் வீட்டின் கேப்டன்

இதனை தொடர்ந்து கேப்டன் டாஸ்க்கில் சிபி, ராஜு, இமான் அண்ணாச்சி, பாவனி ரெட்டி மற்றும் இசைவாணி என 5 பேர் பங்கேற்றனர். அவர்களில் சிபி பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்

அதன்படி ஹவுஸ்மேட்டுகளுக்கு இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பஞ்சதந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வெற்றி பெறும் போட்டியாளர்கள்

வெற்றி பெறும் போட்டியாளர்கள்

இந்த நாணயங்களை பாதுகாப்பதுதான் ஹவுஸ்மேட்டுகளின் வேலை. நாணயத்தை கைப்பற்றும் போட்டியாளர்கள் ஒரு நாணயத்தை கைப்பற்றிய உடன், அதனை பிக்பாஸிடம் தெரிவிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்திருந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதுக்குதான் இவ்ளோ லேட்டா ?

இதுக்குதான் இவ்ளோ லேட்டா ?

இதில் ஐக்கி பெர்ரி, மதுமிதா மற்றும் வருண் ஆகியோர் தலா ஒரு நாணயங்களை எடுத்துள்ளனர். இவ்வாறாக உள்ளது இன்றைய முதல் புரமோ. வழக்கமாக காலை 9 மணிக்கு ஷேர் செய்யப்பட வேண்டிய புரமோ இன்று காலை 10 மணிக்குதான் விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஒளிபரப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்குதான் இவ்ளோ லேட்டா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X