விஜய் சேதுபதி எப்போ சார் வருவாரு? இணையத்தை திணறடிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் மீம் கிரியேட்டர்களும் தங்களின் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 5 Contestant Nadia Chang Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கியதைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் பல்வேறு சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் அவர்களில் சிலரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

10 பெண் போட்டியாளர்கள்

10 பெண் போட்டியாளர்கள்

மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் அதிகம் பெண் போட்டியாளர்களே உள்ளனர். இசைவானி, மதுமிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, சின்ன பொண்ணு, பாவனி ரெட்டி, நடியா சங், ஐக்கி பெரி, ஸ்ருதி ஜெயதேவன், அக்ஷரா ரெட்டி, தாமரை செல்வி என மொத்தம் 10 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

7 ஆண் போட்டியாளர்கள்

7 ஆண் போட்டியாளர்கள்


இதில் நமிதா மாரிமுத்து திருநங்கை ஆவார். ராஜு ஜெயமோகன், அபிஷேக் ராஜா, அபினய், வருண், இமான் அண்ணாச்சி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் என 7 ஆண் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே கடந்த சில நாட்களாக பல பிரபலங்களின் பெயர்கள் வெளியான வண்ணம் இருந்தன.

தெறிக்கவிடும் மீம்ஸ்

தெறிக்கவிடும் மீம்ஸ்

ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அதனை வைத்து கேலியாக மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர் நெட்சடின்கள். பிக்பாஸ் முடியும் வரை மீம்ஸ்களுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நேற்று முதல் இணையத்தை மீம் ஒன்று தெறிக்கவிட்டு வருகிறது.

எப்போ சார் வருவாரு?

எப்போ சார் வருவாரு?

அதாவது, பிக்பாஸ் வீட்டுக்கு விஜய் சேதுபதி எப்போ சார் வருவாரு? என கேட்டு வலம் வரும் மீம் தான் அது. பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில் அவர்கள் வராததால் இப்படி ஒரு மீமை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

நீங்க ரெஸ்ட் எடுங்க

நீங்க ரெஸ்ட் எடுங்க

மற்றொரு மீம்மில் தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதை வைத்து கலாய்த்துள்ளனர். அதாவது, கமலிடம், இனிமேல் நானே ஒழுங்கா ஹோஸ்ட் பண்ணிக்கிறேன்... நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்வதை போல் ஒரு மீமை கிரியேட் செய்துள்ளனர்.

ஒரு பையன் கூட இல்ல

ஒரு பையன் கூட இல்ல

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அதிகம் இருப்பதை பார்த்து, என்னங்கடா ஒரு பையன் கூட இல்ல? என கேட்டு இந்த மீம்மை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

மீம் கிரியேட்டர்ஸின் சொத்து

மீம் கிரியேட்டர்ஸின் சொத்து

மற்றொரு மீம்மில் கடைசி சீசனில் அர்ச்சனாவும் ரியோவும் நமக்கு கிடைத்தார்கள். இந்த சீசனில் இருவரும் சேர்ந்து ஒருவராக கிடைத்துள்ளார். மீம் கிரியேட்டர்ஸின் சொத்தை வரவேற்போம் என போட்டியாளர் ஒருவரை கிண்டல் செய்து மீம் ஷேர் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X