கவின் ஃபிரண்டுன்னு நிரூபிச்சுட்டாப்ல.. பாத்ரூம் கழுவ ஆசைப்படும் ராஜு.. பிக்பாஸ் முதல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் டிவியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாத அளவாக 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பலரும் புது முகங்களாகவே உள்ளனர்.

கேப்டன் பதவிக்கான தேர்வு
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. போட்டியாளர்களிடம் பேசும் பிக்பாஸ், இந்த பிக்பாஸ் வீட்டிற்கு கேப்டனாகும் தகுதி தனக்கு இருக்குன்னு நினைக்கும் 5 பேரை அழைக்கிறார்.

எந்தெந்த துறைக்கு தலைவர்?
இதனைக் கேட்டு நடிகர் ராஜு, பாடகி சின்ன பொண்ணு, நமீதா, நிரூப் சந்திப், பாவனி ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து பேசும் பிக்பாஸ் உங்களில் யார் எந்த அணிக்கு தலைவராக போகிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

பாத்ரூம் க்ளீனிங்
இதனைக் கேட்ட நடிகர் ராஜு , நான் பத்ரூம் க்ளினிங் அணிக்கு கேப்டனாகலாம் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார். அதனைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் கலகலவென சிரிக்கின்றனர். இதனைக் கேட்ட பிரியங்கா நாங்கல்லாம் ஒன்னானோம் கக்கூஸ் கழுவி ஃபிரண்டானோம் என கோஷம் போடுகிறார்.

கவினின் நண்பர்
இதனை பார்த்த ரசிகர்கள், ராஜு பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவினின் ஃபிரண்ட் என்பதை நிரூபித்துவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், எப்போதும் பாத்ரூமிலேயே இருப்பார். அரட்டை அடிப்பது, அழுவது, அமைதியாக இருப்பது என எதுவென்றாலும் பாத்ரூமில்தான்.

வந்த வேகத்தில் ஆசை
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் கூட கவினை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர். மேலும் சமூக வலைதளங்களில் கக்கூஸ் கவின் என்று அவ்வப்போது கேலி செய்து ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட்டாக்கினர். இந்நிலையில் கவினின் நண்பரான ராஜு வந்த வேகத்தில் பாத்ரூம் க்ளினிங் டீம்முக்கு தலைவராக ஆசைப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











