என் கணவர்தான் சார் எல்லாத்துக்கும் காரணம்.. கண்ணீர் விட்டு ராஜுவுக்கு புரிய வைத்த சின்னப்பொண்ணு!

சென்னை: தான் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் தன் கணவர்தான் என கண்ணீர்விட்டு தான் பட்ட கஷ்டங்களை ராஜுவுக்கு புரிய வைத்துள்ளார் சின்னப்பொண்ணு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல், ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் குறித்து பேசினார்.

சின்னப்பொண்ணு கதைக்கு டிஸ்லைக் கொடுத்தது ஏன் என ராஜுவை விளாசிய கையோடு சின்னப் பொண்ணுவிடம் வந்தார் கமல்.

விட்டு போன விஷயங்கள்

விட்டு போன விஷயங்கள்

அப்போது நான் சொன்னது அவருக்கு புரியாததால் ராஜு டிஸ்லைக் கொடுத்து விட்டார், எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை என்றார் சின்னப்பொண்ணு. தொடர்ந்து பேசிய சின்னப்பொண்ணு அன்று விட்டு போன விஷயங்களையெல்லாம் கமல் முன்பு கூறினார்.

கலைமாமணி விருது

கலைமாமணி விருது

அவர் பேசியதாவது, அவ்வளவு கஷ்டப்பட்டு பாடி, சினிமாவுக்கு வந்தேன். அதற்கு கவுரமாக கலைமாமணி விருது கிடைத்தது. அந்த விருதை என்னை போன்ற கலைஞர்களுக்கு சமர்ப்பித்தேன். என் கணவர் எனக்காக பல விஷயங்களை செய்துள்ளார்.

என்னோட வலி வேதனை

என்னோட வலி வேதனை

எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் என் கணவர் என்னை ஒரு குழந்தையை போல் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லாமல் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என்று கூறினார். என்னோட வலி வேதனை அதில் இருந்து மீண்டு வந்தது எல்லாம் மற்றவர்களுக்கு தெரியாது.

விருது வைக்க இடமில்லை

விருது வைக்க இடமில்லை

இன்று இரண்டு வீடு வைத்துள்ளேன். ஊரில் ஒரு வீடு.. இங்கு ஒரு வீடு.. இங்குள்ள வீடு வாடகை வீடுதான். ஆனால் வீட்டில் விருது வைக்க இடமில்லை. அந்தளவுக்கு விருதுகள் வாங்கியுள்ளேன். சாதாரணமாக இந்த அளவுக்கு வரவில்லை. போட்டுக்கொள்ள உடை இருக்காது.

பழைய டிரெஸ் வாங்கி கொடுப்பாங்க

பழைய டிரெஸ் வாங்கி கொடுப்பாங்க

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எல்லோரும் புது டிரெஸ் போடுவார்கள். எங்களுக்கு பழைய சட்டை வாங்கி கொடுப்பாங்க எங்க அப்பா அம்மா, அந்தளவுக்கு வறுமை. அண்ணனுடைய கால் சட்டையும் கிழிந்த பனியனையும் போட்டு கொண்டிருப்பேன்.

என் கணவர் இல்லாவிட்டால்

என் கணவர் இல்லாவிட்டால்

இன்னைக்கு பல கலைஞர்களுக்கு உதவி செய்கிறேன். அதற்கெல்லாம் அன்று பட்ட கஷ்டம் தான். என் கணவர் இல்லாவிட்டால் தான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது என்ற அவர் தனது குருநாதருக்கும் தனது கணவருக்கும் பிக்பாஸ் வீட்டுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு ஆடியன்ஸை கூட தவற விடக்கூடாது

ஒரு ஆடியன்ஸை கூட தவற விடக்கூடாது

சின்னப் பொண்ணு பேசிய கதையை எல்லாம் கேட்ட கமல், நீங்கள் இவ்வளவு சிரத்தை எடுப்பதில் இருந்து ஒரு ஆடியன்ஸை கூட தவற விட்டுவிடக் கூடாது என்பது தெளிவாக தெரிகிறது என்றார். இதுதான் ஒரு கலைஞர்கள். தங்களை பற்றி எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள் என்றார். இதனைக் கேட்ட ராஜு, நான் அன்று டிஸ்லைக் கொடுத்ததால்தான் இன்று இப்படி பேச வாய்ப்பு கிடைத்தது என பூசி மொழுகினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X