பிக் பாஸ் தமிழ் 5ல் இவங்க 4 பேரும் கன்ஃபார்ம்.. கலக்கல் பர்ஃபார்மன்ஸ் உடன் அதிர வச்சிருக்காங்க!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Recommended Video
மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் வீட்டை சுற்றி கமல்ஹாசன் ரசிகர்களுக்கு காட்டும் டூர் ஷூட்டிங் மற்றும் போட்டியாளர்களின் அறிமுக நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் விடிய விடிய ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது.

பிரம்மாண்ட துவக்க விழா
பிக் பாஸ் சீசன் 5 பிரம்மாண்ட துவக்க விழாவுடன் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. விக்ரம் படத்தின் அறிமுக டீசரில் கமல் சொன்னது போலவே "ஆரம்பிக்கலாமா" என்கிற வசனத்துடன் பிக் பாஸ் சீசன் 5ஐயும் அட்டகாசமாக தொகுத்து வழங்க ரெடியாகி விட்டார் கமல்.

அட்டகாசமா இருக்கு
ஏகப்பட்ட வேலைப்பாடுகள் அடங்கிய வீடாக இந்த 5வது சீசன் பிக்பாஸ் வீடு உருவாகி உள்ளது. எங்கே பார்த்தாலும் 5ம் நம்பரை தலையணை, போர்வை, வீட்டின் தோற்றம், டைனிங் ஹால் என எல்லா இடங்களிலும் பதித்து வைத்துள்ளனர். போட்டியாளர்கள் அனைவருக்கும் 5ம் நம்பர் ஜெர்சியை கொடுக்காமல் விட்டால் நல்லது.

4 பேரு கன்ஃபார்ம்
இதுவரை பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ளதாக 4 போட்டியாளர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அந்த 4 பேரும் ஸ்டன்னிங் பர்ஃபார்மன்ஸை கொடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கானா பாடகி
The Casteless Collective கானா கேங்கை சேர்ந்த இசைவாணி இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்கிற தகவல் உறுதியாகி உள்ளது. ராயபுரத்தை சேர்ந்த கானா பாடகி உலகம் முழுக்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கானா கச்சேரிகளை நடத்தி கலக்கியவர். கடந்த சீசனில் சுசித்ரா, ஆஜீத் உள்ளிட்ட பாடகர்கள் இடம்பெற்ற நிலையில், இந்த சீசன் கானா கச்சேரியில் கலக்கப் போகுது.

ராஜு ஜெயமோகன்
ஏகப்பட்ட வேலைப்பாடுகள் அடங்கிய வீடாக இந்த 5வது சீசன் பிக்பாஸ் வீடு உருவாகி உள்ளது. தலையணை, போர்வை, வீட்டின் தோற்றம், டைனிங் ஹால் என எல்லா இடங்களிலும் 5ம் நம்பரை பதித்து வைத்துள்ளனர். போட்டியாளர்கள் அனைவருக்கும் 5ம் நம்பர் ஜெர்சியை கொடுக்காமல் விட்டால் நல்லது.

ஜெர்மனி தொழிலதிபர்
இந்த சீசனில் வெறும் நடிகர்களை மட்டும் களமிறக்காமல் தொழிலதிபர்கள், யூடியூபர்கள் என ரசிகர்களுக்கு அதிகளவில் தெரியாத பல புதுமுகங்கள் களமிறங்குகின்றன. ஜெர்மனியை சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா இந்த பிக் பாஸ் சீசனில் 3வது போட்டியாளராக களமிறங்கி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஓப்பன் பண்ணா அபிஷேக்
பிக் பாஸ் சீசன் 5ல் 4வது போட்டியாளராக யூட்யூப் விமர்சகர் ஓப்பன் பண்ணா அபிஷேக் ராஜா பங்கேற்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமா விமர்சனங்கள், பிரபலங்களுடன் பேட்டி, இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் பாய் பெஸ்டி என ரசிகர்களுக்கு ரொம்பவே பரீட்சையமானவர் அபிஷேக். கமல் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இவர் லைவ் பேட்டி நடத்தியிருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் என உறுதியான தகவல்கள் கசிந்துள்ளன.

சீக்கிரமே அடுத்த லிஸ்ட்
மிக விரைவிலே மற்ற போட்டியாளர்கள் குறித்து கசியும் தகவல்களை வெளியிட காத்திருக்கிறோம். இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் அடுத்த 100 நாட்களுக்கு ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக போகின்றனர். ரசிகர்களின் தலைவன் மற்றும் தலைவியாக போகின்றனர் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











