போட்டுக்க டிரெஸ் கூட இல்ல... ஹவுஸ் மேட்ஸை கலங்க வைத்த கானா இசைவாணி.. பிக்பாஸ் முதல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான பாத்ரூம் க்ளீனிங், சமையல், ஹவுஸ் கீப்பிங், பாத்திரம் கழுவுவது போன்ற டீம்கள் பிரிக்கப்பட்டன.
தொடர்ந்து ஹவுஸ் மேட்ஸ் ஒருவருக்கொருவர் பேசி அறிந்து கொண்டனர் பேய்க்கதை, தமிழ் பாடம், டீப்போடுவது எப்படி என பல சம்பவங்கள் அரங்கேறின.

முதல் டாஸ்க்காக
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக நுழைந்த இசைவாணி தான் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார். ஆக்டிவிட்டி ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அமர்ந்திருக்க, பேசுவதற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக அறையில் நின்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார் இசைவாணி.

சாப்பிட சாப்பாடு இல்லை
தொடர்ந்து பேசும் இசைவாணி, தனது அப்பா துறைமுகத்தில் பணியாற்றியதாக கூறுகிறார். பின்னர் தனது அப்பாவுக்கு வேலை போனதும், சம்பளம் இல்லாமல் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் போனதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். மேலும் வாடகை கொடுக்காததால் தங்குவதற்கு வீடு இல்லாமல் ஒவ்வொரு வீடாக விரட்டினார்கள் என கண்ணீர் விட்டப்படியே கூறி ஹவுஸ்மேட்ஸையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளார் இசைவாணி.

ஒரு வேலைதான் சாப்பாடு இருக்கும்
மேலும் தனக்கு நிறைய டிரெஸ் போட வேண்டும் என்று ஆசை என்றும் ஆனால் போட்டுக்கொள்ள கூட டிரெஸ் இருக்காது என்றும் கூறி கண்ணீர் விட்டுள்ளார். அதோடு தனது வீட்டில் ஒரு வேலைதான் சாப்பாடு இருக்கும் என்றும் அதையும் தனது அப்பா, தான் சாப்பிட வேண்டும் என்று வைத்து விடுவார் என்றும் கூறி மற்றவர்களையும் கண்ணீர் விட வைத்துள்ளார்.

கண்ணீர் விடும் போட்டியாளர்கள்
இசைவாணி பேசுவதை கேட்டு ஜெமினி கணேசனின் பேரனான நடிகர் அபினய், மற்றும் தமிழ் ராப்பரான ஐக்கி பெர்ரி ஆகியோர் கண்ணீர் விட்டுள்ளனர். இறுதியாக நாம் கஷ்டப்படுவதை இப்படி கஷ்டப்படுறோமேன்னு நினைக்காதீங்க என்னைக்காவது ஒரு நாள் நம்ம லைஃப் மாறும் என கூறி முடித்துள்ளார். வட சென்னையை சேர்ந்த இசைவாணி, கானா பாடல்களை பாடி வருகிறார்.

பெருமைப்படுத்திய பிபிசி
கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த இசைவாணி, பாடகராக வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை தன் மூலமாக நிறைவேற்றியுள்ளார். இசைவாணியை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்து பிபிசி பெருமைப் படுத்தியது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்குவதற்காக அவரை இப்படி பெருமைப்படுத்தியது பிபிசி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











