யாஷிகாவுக்கு நேரலையில் லிப்லாக் கொடுத்தவரா இந்த நிரூப் நந்தகுமார்? தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்துக்கு நீருப் லிப்லாக் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் டிவியில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதமே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிக்பாஸ் சீசன் நான்கை போன்றே சீசன் ஐந்தும் அக்டோபர் மாதம் தொடங்கியுள்ளது.

போட்டியாளரின் வீடியோ
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சிலர் மட்டுமே தெரிந்த முகமாக உள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்கள் புதிய முகங்களாகவே உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கெற்றுள்ள போட்டியாளர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நெருங்கிய தோழிகள்
அதாவது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய தோழிகளாயினர். அவர்களின் நட்பை ஊரே அறிந்து இருந்தது. ஐஸ்வர்யா தத்தாவை ரொம்பவே முதிர்ச்சியுடன் கையாண்டார் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட்டம்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு கழித்து யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் தங்களின் ஓராண்டு நட்பை கொண்டாடினர். ஸ்டார் ஹோட்டலில் சரக்கு பார்ட்டி வைத்து தங்களின் நட்பின் முதலாம் ஆண்டை சக நண்பர்களுடன் கொண்டாடினர்.

ஆண் நண்பர் கொடுத்த லிப்லாக்
தங்களின் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களிலும் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் லைவ் என்றும் பாராமல் யாஷிகாவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் யாஷிகாவின் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிரூப்
காரணம்.. அந்த வீடியோவில் யாஷிகாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் நந்தகுமார் என கூறப்படுகிறது. பலரும் அந்த வீடியோவில் இருப்பது நிருப் தான் என குறிப்பிட்டு அந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர்.

நிரூப் ஒரு மாடல்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் நந்தகுமார் ஒரு மாடல் ஆவார். சில படங்களிலும் நடித்துள்ளார் நிரூப். ஸ்ட்டார்ட் அப் கம்பெனி நடத்தி வரும் நிரூப் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆறடி உயரம், தலை நிறைய முடி என உள்ளார் நிரூப்.

நெருக்கமான போட்டோஸ்
இதனிடையே நிரூப் யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த பல போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார்.

விபத்தில் சிக்கிய யாஷிகா
அப்போது அவரது கார் சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











