அடக்கடவுளே.. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா.. பிக் பாஸ் ஃபைனல்ஸில் பங்கேற்பாரா?

சென்னை: இவ்ளோ நாள் அவ்ளோ எனர்ஜியுடன் ஒட்டுமொத்த சீசனையும் தாங்கிப் பிடித்து வந்த பிரியங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது புரமோவில் பிரியங்கா இடம்பெறாத நிலையிலேயே ரசிகர்கள் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு என சந்தேகங்களை கிளப்பினர்.

இந்நிலையில், எபிசோடில் தெளிவாக பிரியங்காவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காட்டப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கன்ஃபெஷன் ரூம் அழைத்த பிக் பாஸ்

கன்ஃபெஷன் ரூம் அழைத்த பிக் பாஸ்

ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல்களில் இருந்து நடிகர்கள் வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு ஹோஸ்ட் பண்ண வேண்டும் என கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் கூறினார். இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பிரியங்கா இருக்காரே அப்புறம் ஏன் புரமோவில் வரவில்லை என ரசிகர்கள் யோசித்தனர்.

உடம்பு முடியல

உடம்பு முடியல

கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்த நிலையில், உடை மாற்றும் அறையில் அழுது கொண்டிருந்தார் பிரியங்கா. அவருக்கு என்ன ஆச்சு என ராஜு கேட்க, உடம்பு முடியல தொடை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது என பிரியங்கா சொல்ல சொல்ல ரசிகர்கள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.

ஸ்கேன் எடுக்கணும்

ஸ்கேன் எடுக்கணும்

இன்னும் 3 நாள் தான் முடிச்சுட்டு வெளியே போய் ஸ்கேன் எடுத்துக்குறேன்னு பிரியங்கா ரொம்பவே ஃபீல் பண்ணி ராஜுவிடம் சொல்ல மீண்டும் கன்ஃபெஷன் ரூமுக்கு பிரியங்காவை அழைத்தார் பிக் பாஸ். ராஜுவை தவிர பிரியங்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்து மற்ற யாருமே ஏன் ரியாக்‌ஷன் செய்யவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் அழைத்த நிலையில், ஒரு கவரில் சில உடைகளை எடுத்துக் கொண்டு மருத்துவனைக்கு கிளம்பி விட்டார் பிரியங்கா. அச்சச்சோ பிரியங்கா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போறாரே விஜய் டிவி பயங்கரமாக பிளான் பண்ணி அனுப்பிடுச்சா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பரபரப்பை கிளப்ப

பரபரப்பை கிளப்ப

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி எதிர்பார்த்த மாதிரியே முடிந்து விடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு கனெக்ட்டும் இல்லாமல் போய்விடும் என்பதற்காக ஃபேக்காக ஒரு சீனை க்ரியேட் பண்ணி பிரியங்காவை மெடிக்கல் செக்கப்பிற்காக அனுப்பி உள்ளனர் என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 13th January 2022 - Promo 1 | Bigg Boss வீட்டுக்கு வந்த Thamarai
பிரியங்கா வருவார்

பிரியங்கா வருவார்

பிரியங்காவுக்கு ஒண்ணும் ஆகவில்லை என்றும் நாளையே மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை சிம்பதி ஓட்டுக்களை குவிக்க இப்படியொரு முயற்சியா? அல்லது விஜய் டிவியின் பிளான் என்ன என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X