கடவுள் கருப்பா இருக்க மாட்டாரா என்ன? வேற லெவலில் வைரலாகும் சுருதியின் 'லட்சுமி' போட்டோஷூட்!

சென்னை: தமிழ்நாட்டு கோயில்களில் கருங்கல்லில் ஆன சிலையைத் தான் காலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்.

கேலண்டர்களில் கலர் கலராக லட்சுமி தேவி டிஜிட்டல் பிரின்ட்டிங்கில் காட்சியளித்ததும் மக்களின் மனம் கடவுள்கள் எல்லாம் கலராகத் தான் இருப்பார்கள் என எண்ணத் தொடங்கியுள்ளது. அதனை மறுபடியும் மாற்றும் முயற்சியில் சில டார்க் தீம் போட்டோகிராஃபி போட்டோஷூட்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படி நடத்தப்பட்ட ஒரு போட்டோஷூட்டில் தான் லட்சுமி தேவியாக பிக் பாஸ் சுருதி போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3ம் தேதி ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பமானது. அதில், போட்டியாளராக மாடல் அழகி சுருதி அறிமுகமானார். டார்க் ஸ்கின் டோனில் இருப்பதால் பலர் தன்னை கிண்டல் செய்ததாகவும், அந்த கருப்பழகை வைத்தே மாடலிங் துறையில் கலக்கி வருவதாகவும் சுருதி தெரிவித்திருந்தார்.

அக்‌ஷராவுடன் இணைந்து

அக்‌ஷராவுடன் இணைந்து

ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில், மற்றொரு மாடல் அழகியான அக்‌ஷரா ரெட்டியுடன் இணைந்து மேடையில் இருந்து கமலிடம் விடைபெற்ற சுருதி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அந்த மேடையில் சுருதி செய்த ராம்ப் வாக் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

வாழ்வின் வலி

வாழ்வின் வலி

பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த முறை ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்து வந்துள்ள நிலையில், அவர்களை பற்றிய அறிமுக டாஸ்க் ரசிக்கும் படியாகவே இருப்பதாக பல ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சுருதியின் அம்மாவுக்கு திருமணம் எனும் பெயரில் நடந்த அநீதியையும் அதனால் வாழ்வில் தான் பட்ட வலிகளையும் அவர் அழுது கொண்டே சொல்லி ஏகப்பட்ட ரசிகர்களின் இதயங்களை பிடித்து விட்டார்.

கருப்பு லட்சுமி

கருப்பு லட்சுமி

கடவுள் எல்லாம் கலர்ஃபுல்லாத்தான் இருக்கணும் என்கிற மனநிலையை மாற்ற வேண்டும் என்கிற முனைப்போது எடுக்கப்பட்ட டார்க் காட் தீமில் நடத்தப்பட்ட கேலண்டர் போட்டோஷூட்டில் கருப்பு லட்சுமியாக அத்தனை அம்சங்களுடனும் போஸ் கொடுத்துள்ள சுருதியை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பலரும் அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

நிற பாகுபாடு

நிற பாகுபாடு

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலேயே இன்னமும் இந்த நிறவெறி ஓயவில்லை. வெள்ளையா இருந்தா தான் அழகு என்றும் கருப்பா இருந்தா கிண்டல் செய்வதுமாக உள்ள மன நிலை மாற வேண்டும் என பலரும் எடுத்து சொல்லி வந்தாலும், நிற பாகுபாடு பிரச்சனை எவ்வளவு படித்து தேர்ந்தாலும் மாறாமல் அப்படியே இருப்பது ஏன்? என்பது தான் புரியவில்லை. ஆனாலும், மாடலிங், சினிமா உள்ளிட்ட அழகு சார்ந்த துறைகளிலும் ஏகப்பட்ட டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்டவர்கள் பல தடைகளை கடந்து பெரும் சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வின்னர் ஆவாரா

வின்னர் ஆவாரா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தவிர்த்து மற்ற மூன்று சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களே டைட்டிலை வென்ற நிலையில், இந்த சீசனில் அதிக பெண் போட்டியாளர்கள் உள்ள நிலையில், வின்னர் மற்றும் ரன்னர் அப்பாக பெண்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுருதி ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மனங்களை கவர்ந்துள்ள நிலையில், அவர் இந்த சீசன் டைட்டிலை தட்டிச் செல்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X