ஆபாசமாக நடிக்க மாட்டேன்.. வெள்ளந்தியாக பேசிய நாடக கலைஞர் தாமரை செல்வியும் பிக் பாஸ் வீட்டில்!

சென்னை: அனைத்து துறை கலைஞர்களின் சங்கமாக இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

Recommended Video

Bigg Boss 5 Contestant Gana ISAIVANI Biography | Kamal Hassan, BB 5 Grand Launch

பிக் பாஸ் சீசன் 5ல் 16வது போட்டியாளராக நாடக கலைஞர் தாமரை செல்வி பங்கேற்றுள்ளார்.

வெள்ளந்தியாக பேசும் அவர் பிக் பாஸ் வீட்டுக்கு செட் ஆவாரா? மாட்டாரா? என இப்பவே நெட்டிசன்கள் கணக்கு போட ஆரம்பித்து விட்டனர்.

குடும்ப கஷ்டத்துக்காக

குடும்ப கஷ்டத்துக்காக

குடும்ப கஷ்டத்துக்காகத் தான் நாடக துறையில் நடிக்க வந்தேன் என சாமானியரின் அடையாளமான நாடக கலைஞர் தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருக்கிறார். இப்படியொரு போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா? என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளார் தாமரை செல்வி.

காமெடி பண்ணுவேன்

காமெடி பண்ணுவேன்

தெருக்கூத்து நாடகங்களில் வள்ளி திருக்கல்யாணம் உள்ளிட்ட நாடகங்களின் ராஜபார்ட் நடிகர்கள் நடிப்பதற்கு முன்பாக காமெடி செய்யும் கலைஞராக தான் நடித்து அசத்துவேன் என தாமரை செல்வி தன்னைப் பற்றிய ஏவியில் தெளிவாக கூறியுள்ளார்.

ஆபாசமாக நடிக்க மாட்டேன்

ஆபாசமாக நடிக்க மாட்டேன்

சில நாடக கலைஞர்கள் தெருக்கூத்துகளில் ஆபாசமாக பேசுவதும், ஆபாசமாக உடை அணிந்து நடிப்பதுவுமாக உள்ள நிலையில், தான் அப்படியெல்லாம் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்றும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் பேச மாட்டேன் என்றும், எனக்கு ரெஸ்டே கொடுக்காமல் நாடகம் பண்ண அழைப்பார்கள் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் தாமரை செல்வி.

மேக்கப் போட்டால்

மேக்கப் போட்டால்

தாமரை செல்வி இருப்பதற்கும் அவர் மேக்கப் போட்டு விட்டு நாடக கலைஞராக மாறியதற்கும் இடையே டோட்டல் டிரான்ஸ்பர்மேஷன் உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர். பல தரப்பட்ட கலைஞர்களும் இந்த சீசன் பிக் பாஸில் பங்கேற்றுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்வார் என்பது மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X