டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 பேர்... வெளியேறப்போவது யார்... கசிந்தது பிக் பாஸ் ரகசியம் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், தற்போது விளையாட்டு சூடுபிடித்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில், அக்ஷரா மற்றும் வருண் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர்.

மனக்கசப்புடன்

மனக்கசப்புடன்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமுமாக இருந்த இந்த வீட்டில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்க் நேரத்தின் போது மட்டும் சண்டைப் போட்டுக்கொண்ட வந்த போட்டியாளர்கள் தற்போது ஒருவித மனகசப்புடனே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

டிக்கெட் டு ஃபினாலே முதல் டாஸ்கிலே இந்த டிக்கெட்டை வாங்க தகுதி இல்லாதவர் நிரூப் என்று கூறி அனைவரும் அவரை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டனர். இதையடுத்து நேற்று நடந்த முட்டை டாஸ்கில் தாமரை பிரியங்கா இடையே தள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்படும் அளவுக்கு போய் விட்டது. இதையடுத்து, இந்த டாஸ்கில் இருந்து பாவனி மற்றும் தாமரை வெளியேறி விட்டனர்.

முன்னேறி உள்ளார்

முன்னேறி உள்ளார்

தற்போது, டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் 5 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். நிரூப் இந்த டிக்கெட் தனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்த நிலையில் அவருக்கு இந்த டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு பிரியங்காவால் பறிபோனது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இதுவே நிரூப்பிற்கு ஒரு பிளஸ்சாக மாறி உள்ளது. இதுநாள் வரையில் டேஞ்சரிலிருந்த நிரூப் தற்போது அதிக வாக்குகளை பெற்று முன்னேறி விட்டார்.

வெளியேற அதிகவாய்ப்பு

வெளியேற அதிகவாய்ப்பு

தற்போது டேஞ்சர் ஜோனில் சஞ்ஜீவ்,சிபி, அமீர் ஆகிய 3 பேர் இருக்கின்றனர். இதில் போட்டியிலிருந்து வெளியேற அதிக வாய்ப்பு அமீருக்கு இருக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பாவனியின் பின்னால் சுற்றி வந்த அமீர் திடீரென நான் பவானிக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என பாவனியை நாமினேட் செய்தது பலரை கடுப்பாக்கி உள்ளது. அதேபோல, சிபி மற்றும் சஞ்ஜீவிற்கு குறைந்த வாக்குகளே கிடைத்திருப்பதால் அவர்களும் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பொருத்திருந்து பார்க்கலாம் இந்த வாரம் யார் வெளியேறுகிறார்கள் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X