Don't Miss!
- News
தடை..அதை உடை! கோயில் பூட்டை உடைத்த ஆட்சியர் -தலித்துகளுடன் சென்று வழிபாடு.. திருவண்ணாமலையில் புரட்சி
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கால் வலின்னு சொல்லிட்டு இப்படி குதிக்கிறாரே பிரியங்கா.. பட்டாசு மேடையில் ஏறிய ஃபைனலிஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே நாளை மாலை 6.30 மணி முதல் ஆரம்பமாகிறது.
சனிக்கிழமையான இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெற போகிறது என்பது தொடர்பான புரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
பட்டாசுகள் வெடிக்க, மின் விளக்குகளில் போட்டியாளர்களின் பெயர்கள் ஜொலிக்க மேடை ஏறி ஒவ்வொரு ஃபைனலிஸ்ட்டும் தங்களுக்கான பயண வீடியோவை பெரிய திரையில் கண்டு ரசிக்கின்றனர்.
ஹேர்கட்லாம்
பண்ணது
வீணாப்போச்சே..
முதல்
நபராக
பிக்
பாஸ்
வீட்டை
விட்டு
வெளியேறிய
ஃபைனலிஸ்ட்
நிரூப்?

கிராண்ட் ஃபினாலே எப்போ ஆரம்பம்
ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே ஆரம்பம் ஆகிறது. இரவு 11 அல்லது 12 மணிக்கு டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை என்ன என்ன நிகழ்வுகள் அரங்கேறப் போகின்றன என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர்.

பயண வீடியோ
முதல் புரமோவில் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு ரெடியாகும் காட்சிகள் காட்டப்பட்ட நிலையில், இரண்டாவது புரமோவில் போட்டியாளர்கள் தங்களின் பயண வீடியோக்களை கமல் சார் முன்னிலையில் பார்க்காமல் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே தனியாக மேடை அமைக்கப்பட்டு பார்க்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

பட்டாசு மேடை
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 5 ஃபைனலிஸ்ட்டுகளையும் சிறப்பாக கெளரவப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட பிரத்யேக மேடையில் பட்டாசுகள் வெடிக்கின்றன. மேலும், மின் விளக்குகளில் நிரூப், அமீர், பாவனி, ராஜு மற்றும் பிரியங்காவின் பெயர்கள் ஜொலிக்கின்றன.

முதல் ஷாட்டில் நிரூப்
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக நிரூப் தான் வெளியேறப் போகிறார் என்பதை குறிக்கும் விதமாக இரண்டாவது புரமோவின் முதல் ஷாட்டிலேயே நிரூப் காட்டப்பட்டு இருக்கிறார். மேலும், வெற்றி பெறுபவர்கள் வெற்றி பெறட்டும் நான் அதை சேஸ் பண்றவன் சேஸ் பண்ணிட்டே இருப்பேன் என நிரூப் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கண் கலங்கிய ராஜு
இதுவரை மக்கள் தன் மீது இப்படியொரு நம்பிக்கையை வைத்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்களே என்றும் தனது பயண வீடியோவை பார்த்து கண் கலங்கி ராஜு அழும் காட்சிகள் இந்த இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன. ராஜுவுக்குத் தான் டைட்டில் கிடைக்க வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சந்தோஷத்தில் அமீர்
50வது நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து விட்டு டிக்கெட் டு ஃபினாலே வின் பண்ணி ஃபினாலேவுக்குள் கெத்தாக நுழைந்த அமீர் செம அழகாக அந்த மேடையில் ஏறி நின்று இருப்பதே அவர் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கொடுத்து இருக்கும். டிக்கெட் டு ஃபினாலே வின் பண்ணும் போது சந்தோஷமே இல்லை என சொன்ன அமீர் தற்போது ஹேப்பி ஆகி உள்ளார்.

பதுமை பாவனி
இந்த சீசனில் அழகான போட்டியாளராக கலந்து கொண்ட பாவனிக்கு அந்த அழகே ஆயுதமாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. அபிநய், அமீர் என லவ் டிராக்குகள் அவரை பெரிதும் காயப்படுத்திய நிலையிலும், அழகுப் பதுமையாக அந்த பட்டாசு மேடையில் பாவனி நிற்பதே தனி அழகு தான். பாவனி ஆர்மியினரும் செம ஹேப்பியாகி இருப்பார்கள்.

பிரியங்காவிடம் பேசிய பிக் பாஸ்
நிரூப்பை எப்படி முதலிலேயே காட்டினார்களோ அதே போல பிரியங்காவை கடைசியாக காட்டி உள்ளனர் இந்த புரமோவில். இது ஏதாவது குறியீடாக இருக்குமா? என நெட்டிசன்கள் குழம்பிப் போயுள்ளனர். மேலும், பெருசு என பிக் பாஸை கலாய்த்து வந்த பிரியங்காவை லவ் யூ சிறிசு என பிக் பாஸ் சொல்வதும் டைட்டிலை தூக்கி பிரியங்காவுக்கு கொடுப்பதற்காகவா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கால் வலியில் எப்படி?
பிரியங்காவுக்கு காலில் வலி என சொல்லி வந்த நிலையில், மேடையில் அப்படி துள்ளிக் குதிக்கிறாரே? அதே பழைய எனர்ஜியுடன் தானே உள்ளார் பிரியங்கா? என்றும் இரண்டாவது புரமோவை பார்த்து ஏகப்பட்ட சந்தேகங்களை ரசிகர்கள் கிளப்பி வந்தாலும் சீக்கிரமே யார் வெற்றியாளர் என்பது தெரிய வந்ததும் இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடை கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை
உடல் நலக் குறைவு காரணமாக வெளியேற வேண்டும் என பிக் பாஸ் அதிரடியாக கூறிய போதும் இன்னும் 2 நாள் தானே ஃபினாலே முடிச்சுட்டு வரேன் என பிரியங்கா சொல்லி இருந்தார். அந்த தன்னம்பிக்கையில் தான் அவர் இப்படி துள்ளிக் குதித்து இருப்பார் என்றும், எனர்ஜி ஃபேக்டரி பிரியங்கா அவர் டைட்டில் வின் பண்ண முழு தகுதியுடையவர் என்றும் பிரியங்காவின் ஆர்மியினர் பதிலுக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.