பிக் பாஸ் 5: இங்க அரசியல் இருக்கு என சூசகமாக பேசும் கமல்.. இவங்களாம் ஸ்ட்ராட்டஜி பண்றாங்களாம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14ம் நாளுக்கான 3வது புரமோவில் போட்டியாளர்கள் யாரெல்லாம் ஸ்ட்ராட்டஜியோடு விளையாடுறாங்கனு நினைக்கிறீங்க என கமல் கேட்க பாவனி மற்றும் ஐக்கி பெர்ரி சில போட்டியாளர்களை அடையாளம் காட்டுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரு வாரங்கள் இன்றோடு நிறைவடைகின்றன. இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒருவரை எலிமினேட் செய்ய உள்ளார்.

நாடியா சங் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக எலிமினேட் ஆகும் முதல் நபரா என்பது இன்றைய ஷோவில் தெரிந்து விடும்.

நமீதா வெளியேற்றம்

நமீதா வெளியேற்றம்

இன்றைய நிகழ்ச்சியில் நாடியா சங் முதல் நபராக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட உள்ள நிலையில், அவருக்கு முன்னாடியே நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு ரகசியமாக வெளியேற்றப்பட்டார். நமீதாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை பிக் பாஸ் குழு சொல்லவும் இல்லை காட்டவும் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நாடியா சங் போகிறார்

நாடியா சங் போகிறார்

மலேசிய போட்டியாளர், டிக் டாக் பிரபலம் என பல பில்டப்களுடன் இந்த சீசன் பிக் பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடியா சங் முதல் நபராக மக்களின் ஓட்டுக்களை அதிகளவு பெறாமல் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாப்பிட்டு தூங்குறாங்க

சாப்பிட்டு தூங்குறாங்க

பிக் பாஸ் வீட்டில் 14 நாட்களை இதுவரை கழித்துள்ளனர். பெருசா எதுவும் நடந்தது போன்ற உணர்வு போட்டியாளர்கள் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நல்லா சாப்பிட்டு தூங்க மட்டுமே பிக் பாஸ் வீட்டை கடந்த இரு வாரங்களாக போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றைய மூன்றாவது புரமோவில் போட்டியாளர்கள் போடும் ஸ்ட்ராட்டஜி பற்றி திடீரென கமல் கேட்க, ஓஹோ அப்படியெல்லாம் இந்த ஷோவில் இதுவரை நடந்திருக்கா? என்கிற ரியாக்‌ஷன் உடன் ரசிகர்கள் இந்த மூன்றாவது புரமோவை பார்த்து வருகின்றனர்.

ஐக்கி பேசுகிறார்

ஐக்கி பேசுகிறார்

பிரியங்கா, அபிஷேக், ராஜு, இமான் அண்ணாச்சி, தாமரை உள்ளிட்ட சில போட்டியாளர்களை தவிர அதிகளவில் மற்ற போட்டியாளர்கள் செய்வதை கேமரா காட்டுவதே இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கமல் முன்பாக ஐக்கி பெர்ரி இந்த வீட்டில் ஸ்ட்ராட்டஜி போடுபவர்களாக தனக்கு தெரிபவர்கள் அபிஷேக் ராஜா மற்றும் பிரியங்கா என பேசுகிறார்.

அவர விட மாட்டாங்க போல

அவர விட மாட்டாங்க போல

அபிஷேக் ராஜா, அபிநய், நிரூப் உள்ளிட்ட போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி பண்றாங்கனு எனக்கு தோணுது என பாவனி ரெட்டி அபிநய் பெயரையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து அவர் தனியாக ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டு வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அரசியல் இருக்கு

அரசியல் இருக்கு

பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்தே டபுள் மீனிங்கில் கமல்ஹாசன் அரசியல் கருத்துக்களை 5வது சீசன் வரை பேசி வருகிறார். இந்த புரமோவில் பிரியங்கா கொளுத்தி போடுறாங்க அவங்க ஸ்ட்ராட்டஜி பயன்படுத்துறாங்களா இல்லையான்னு தெரியல என சொல்லும் போது இதில் அரசியல் இருக்கு என கமல் பஞ்ச் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X