வேலையை ஆரம்பித்த பிக் பாஸ்.. அபிஷேக்கை காப்பாற்றுவாரா பாவனி ரெட்டி? வைரலாகும் புரமோ 3!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் கலக்கலான மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு உள்ளிட்ட பஞ்ச பூத காயின்களை வைத்து நடத்தப்பட்ட டாஸ்க்கில் 5 போட்டியாளர்களிடம் ஆளுக்கொரு காயின் உள்ளது.
இந்த காயினை வைத்து தலைவரை மாற்ற முடியும் மற்றும் வெளியேறும் போட்டியாளரை காப்பாற்ற முடியும் என பிக் பாஸ் கூறி உள்ள நிலையில், இந்த வாரமும் கம்மியான ஓட்டுக்களை பெற்றுள்ள நபர் தான் காப்பாற்றப்பட போகிறார் என்பது தெளிவாகி உள்ளது.

பஞ்சபூத காயின்கள்
நிரூப், வருண், இசைவாணி, தாமரை செல்வி மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் கைகளில் தான் இந்த பஞ்சபூத காயின்கள் உள்ளன. இதை வைத்து யார் யாரை காப்பாற்றப் போகிறார். 5 பேரும் ஒவ்வொரு நபரை காப்பாற்ற முடியுமா போன்ற இடியாப்ப சிக்கல் கேள்விகள் கிளம்பி உள்ளன. போன சீசன் போல இந்த 5 பேரும் கலந்து பேசி விவாதித்து முடிவு எடுப்பார்களா? என்பதையும் வெயிட் பண்ணி பார்ப்போம்.

தலைவரை மாற்றலாம்
வார இறுதிக்கு வந்து விட்ட நிலையில், பஞ்ச தந்திர காயின் டாஸ்க்கை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். இந்த காயினை வைத்து தங்களையோ தங்களுக்கு பிடித்தமான நபரையோ வீட்டின் தலைவராக மாற்ற முடியும் என அடுத்த வார கேப்டன் டாஸ்க்கில் விளையாட யாருமே ஆர்வம் காட்ட முடியாத படி செய்து விட்டார்.

எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்
தலைவர் பதவி மாற்றம் மட்டுமின்றி இந்த வாரம் வெளியே போக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் தலையெழுத்தை மாற்றி மீண்டும் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு வர வைக்கவும் முடியும் என்பதை பிக் பாஸ் தெளிவாக கூறி சூப்பராக கொளுத்திப் போட்டு இருக்கிறார்.

பாவனியிடம் கெஞ்சும் அபி
அபிஷேக் பேச்சை இசைவாணி நிச்சயம் கேட்க மாட்டார். அவருக்கு ஆதரவாக சுருதி செம ஸ்ட்ராங்காக இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட அபிஷேக் பாவனியை பேசி மயக்கி விடலாம் என எண்ணி தொடர்ந்து அவரிடம் இந்த வாரம் எலிமினேட் ஆகாமல் இருக்க கெஞ்சி வருகிறார்.
Recommended Video

பாவனி காப்பாற்றுவாரா
கடந்த வாரம் நாடியா சங் வெளியேறிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் அபிஷேக் ராஜா தான் இருந்தார் என்பது ரசிகர்களை போல உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் தெரியும். இந்த வாரம் அபிஷேக் நிச்சயம் வெளியேறிடுவார் என பல போட்டியாளர்களே கணித்துள்ள நிலையில், பாவனி ரெட்டி தன்னிடம் இருக்கும் காயினை வைத்து அபிஷேக்கை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றுவாரா? என்பதை இந்த வாரம் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அபிஷேக் இப்போ சேவ் ஆனால், 80 நாளுக்கு இந்த பிக் பாஸ் வீட்டில் டேரா போட்டு விடுவார் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











