கணவர் இல்லை.. இறந்துட்டாங்க.. பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பாவனி ரெட்டி தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் கூறியுள்ளார்.
Recommended Video
இந்த சீசன் ஆரம்பித்ததும் ஏகப்பட்ட புதிய முகங்கள் இருப்பதால் ரசிகர்கள் சற்றே கடுப்பாகி உள்ளனர்.
ஆனால், பல புதிய கதைகள் போக போக வெளியாகி ரசிகர்களை நிச்சயம் இந்த சீசனை ரசிக்க வைக்கும் என்பதை நம்பியே இப்படியொரு சோதனை முயற்சியை பிக் பாஸ் குழு இந்த முறை முயற்சி செய்துள்ளது.

3வது புரமோ
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 2வது நாள் வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பதை புரமோவாக வெளியிட்டு நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைக்க விஜய் டிவி வழக்கம் போல் ஆரம்பித்துள்ளது. இன்றைய 3வது புரமோவில் பாவனி ரெட்டி தனது கணவர் இறந்து விட்டார் எனும் ஷாக்கிங் நியூஸை இசைவாணியிடம் கூறுகிறார்.

பாலிவுட்டில் அறிமுகம்
21 வயதில் மாடல் அழகியாக அறிமுகமான பாவனி ரெட்டி, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' எனும் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள் மற்றும் ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி ரெட்டி நடித்துள்ளார்.

டிவி தொடர்களில்
சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சன் டிவியின் பாசமலர், விஜய் டிவியின் சின்னத்தம்பி, சன் டிவியின் ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகருடன் திருமணம்
தெலுங்கில் டபுள் டிரபுள், ட்ரீம், தி எண்ட், லஜ்ஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனி ரெட்டி ஏகப்பட்ட டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை என சென்று கொண்டு இருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட சண்டையால் அப்படியொரு பேரிழப்பு ஏற்பட்டது.

சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை
கடந்த 2017ம் ஆண்டு, அதாவது திருமணம் ஆகி ஒரு ஆண்டுக்குள் மனைவி பாவனி ரெட்டியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனமுடைந்து போன பிரதீப் குமார் மனைவியின் சேலையை பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.

இசைவாணி கேள்வி
இதுவரை இல்லாத அளவுக்கு போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கை, வயது உள்ளிட்டவற்றை பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கேட்டு வருகின்றனர். இசைவாணி பாவனி ரெட்டியிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என கேட்க, அவர் தனது கணவர் இறந்து விட்டார் என்கிற சோக கதையை சொல்லி இசைவாணியையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார்.
அழுதுடுவேன்
அது எப்படி நடந்துச்சேன்னு தெரியல, அதைப்பத்தி பேசுனா அழுதுடுவேன் என புரமோவில் பாவனி ரெட்டி கூறுவதை கேட்டே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இன்றைய எபிசோடில் பாவனி ரெட்டியின் சோக கதை ரசிகர்களை நிச்சயம் கண்ணீர் கடலில் ஆழ்த்தும் என தெரிகிறது.

கடந்த ஆண்டு 2வது திருமணம்
முதல் கணவர் இறந்த சோகத்தில் மூழ்கி போயிருந்த பாவனி ரெட்டி கடந்த ஆண்டு பியூ ஆனந்த் ஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ம் ஆண்டே புதிய வீட்டையும் கட்டிக் கொண்டு இருவரும் குடி புகுந்தனர் என்கிற தகவல்களையும் முன்னதாக அளித்துள்ள பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











