Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ராஜு மீது திரும்பிய பஞ்சாயத்து.. பாவனிக்கும் சுருதிக்கும் பதில் சொல்வாரா பிக்பாஸ்? வைரலாகும் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தாங்கள் செய்தது தப்பா? சரியா? என்பதற்கான விளக்கத்தை சுருதி மற்றும் பாவனி பிக் பாஸிடம் கேட்கின்றனர்.
சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!
மேலும், ராஜு பேசிய வார்த்தை தப்பு என பாவனி மற்றும் சுருதி பேச தொடங்கி இருப்பது வீக்கெண்ட் பஞ்சாயத்திற்கான கன்டென்ட்டாக மாறியுள்ளது.

லோகோவில் 5 காயின்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 லோகோவை பார்த்தாலே நட்சத்திரத்தை சுற்றி 5 காயின்கள் இருக்கும் டிசைன் தெரியும். பஞ்ச தந்திர காயினை குறிக்கும் விதமாகவே இந்த பிக் பாஸ் சீசன் 5 முழுவதும் செல்லும் என்பது இப்போது தான் புரிகிறது. நெருப்பு வாரம் தீயாக சென்று கொண்டிருக்கும் நிலையில், காற்று வாரத்தில் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் புயல் அடிக்கும் என்பது உறுதி.

கிளாரிட்டி கொடுங்க பிக் பாஸ்
பிக் பாஸ் உள்பட யாருமே பார்க்க முடியாத இடத்தில் இருந்து சுருதி மற்றும் பாவனி காயினை பிளான் போட்டு திருடிய நிலையில், தாங்கள் அதை ஒரு கேமாக தான் விளையாடினோம் என்று இருவரும் வாதாடி வருகிறார்கள். ஆனாலும், தாங்கள் செய்தது சரியா தவறா என்கிற கிளாரிட்டியை பிக் பாஸ் கொடுக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர். ஏனென்றால் மொத்த வீடும் அவர்களுக்கு எதிராக உள்ளதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

ராஜு சில வார்த்தைகளை விட்டார்
பிக் பாஸிடம் சுருதி கிளாரிட்டி கொடுங்க பிக் பாஸ் என கேட்க, செய்தது தப்பாக இருந்தால் மன்னிப்பு கேட்க தயார் என பேசும் பாவனி ராஜு நேத்து சில வார்த்தைகளை விட்டார் என பஞ்சாயத்தை அப்படியே ராஜு பக்கம் திருப்பி உள்ளார். இந்த வார இறுதியில் கமல் சார் யாருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் பேச போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆதரவும் எதிர்ப்பும்
இதுவரை ராஜு பாய் எதை செய்தாலும் சூப்பர் என கொண்டாடி வந்த பிக் பாஸ் ரசிகர்கள் பாவனி விஷயத்தில் அவர் எல்லை மீறி பேசியது தவறு தான் கண்டித்து வருகின்றனர். மறுபுறம் பாவனிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டார் ராஜு பாய் என ;Thug Life' வீடியோ மீம்களை எல்லாம் ஷேர் செய்து வருகின்றனர்.

மக்கள் எப்படி பார்ப்பாங்க
தாமரைக்கு நாங்க எடுத்துக் கொடுத்த காயின் அது திருப்பிக் கொடு என ராஜு வந்த உடனே சொன்னார். அதன் பிறகு இது காயின் எடுக்கிறது கேமில்லை. மக்கள் நம்மை எப்படி பார்க்கிறாங்க என்பது தான் கேம் என்றார் என சுருதி பெயரை டேமேஜ் பண்ணும் வேலையை ராஜு பாய் செய்து விட்டார் என பாவனியிடம் புலம்பும் முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.