ராஜு பற்றி பின்னாடி பேசிய பிரியங்கா.. திடீரென வார்ன் பண்ண பிக் பாஸ்.. என்ன ஆச்சுன்னு பாருங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் மூன்றாவது நாளுக்கான 3வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss 5 Tamil Day 3 Highlights | Priyanka செய்யும் அட்டகாசம், Thamarai Selvi

நேற்றைய எபிசோடில் சின்னப்பொண்ணு சொன்ன கதைக்கு டிஸ்லைக் போட்ட நம்ம ராஜு பாய் அவரை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் அவரிடம் சென்று பேச, வெளியே டைனிங் ஹாலில் அமர்ந்து கொண்டு அவரை பற்றி லைவ் கமெண்ட்ரி அடித்துக் கொண்டிருந்த பிரியங்காவை திடீரென பிக் பாஸ் அழைத்து வார்ன் செய்த புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஆரம்பமே ஒரு சில மனக்கசப்புகளுடன் சண்டைகளுடன் தொடங்கி உள்ள இந்த சீசன் எப்படி போகப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

இது அதுல

இது அதுல

கடந்து வந்த பாதை போல இந்த சீசன் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை ஆரம்பத்திலேயே சொல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை லைக் செய்யலாம், டிஸ்லைக் செய்யலாம், ஹார்ட்டீன் கொடுக்கலாம் என கடந்த சீசனில் ஆரம்பத்திலேயே பிடிக்கும், பிடிக்காது என போட்டியாளர்களுக்கு பச்சைக் குத்திய அதே டாஸ்க்கை சற்று ஆல்டர் செய்து பயன்படுத்தி உள்ளனர்.

தம்ப்ஸ் டவுன்

தம்ப்ஸ் டவுன்

இசைவாணியின் சோக கீதத்தை கேட்டு பலரும் கண்ணீர் சிந்திய நிலையில், அடுத்ததாக பேசிய சின்னப் பொண்ணுவின் கதையை கேட்டு அதற்கு ஏகப்பட்ட காரணங்களை அடுக்கி டிஸ்லைக் போட்டு இருந்தார் ராஜு ஜெயமோகன். இந்நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவில் "அக்காவுக்கு தம்ப்ஸ் டவுன்" கொடுத்தார்ல அதற்காக மன்னிப்பு கேட்டு சமாளிக்க போயிருக்காரு என பிரியங்கா ராஜு பற்றி மற்ற போட்டியாளர்களிடம் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீட்டில் கிசுகிசு

இந்த வீட்டில் கிசுகிசு

இந்த வீட்டில் கிசுகிசு பேசினால் யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு பேசினால் ஊரே பார்த்து சிரிக்கும் என ஏற்கனவே புரமோவில் கமல்ஹாசன் சொன்ன நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர்கள் குறித்து அதிகளவில் பின்னாடி பேசும் பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அக்காவுக்கு ஐஸ்

அக்காவுக்கு ஐஸ்

அக்காவுக்கு தம்ப்ஸ் டவுன் கொடுத்த ராஜு இப்போ அக்காவிடம் பேசி அவரை சமாதானம் படுத்தி அக்காவுக்கு நல்லா ஐஸ் வைக்கிறார் என்றும், அக்கா அதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க என்றும் பிரியங்கா இமிடேட் செய்து வந்த நிலையில், திடீரென அவருக்கு பிக் பாஸிடம் இருந்து வார்னிங் ஒன்று வந்தது.

பிக் பாஸ் வார்னிங்

பிக் பாஸ் வார்னிங்

எப்போதுமே ஓவர் ஆட்டிட்யூட் காட்டி செம நக்கலாகவே பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா பேசி வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், ராஜு மற்றும் சின்னப் பொண்ணு பேசியதை கலாய்த்துக் கொண்டிருந்த பிரியங்கா தனது மைக் சரிந்து விழுவது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென குரல் கொடுத்த பிக் பாஸ், பிரியங்கா மைக்கை சரியா மாட்டுங்க என வார்ன் செய்த புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X