பொய் பேசுனா எனக்கு பிடிக்காது.. கையை ஓங்கி பாவனியை அடிக்க வந்த தாமரை.. பரபரப்பு புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என ஆடி பாடிய போட்டியாளர்கள் இன்றைக்கு கமல் சார் பஞ்சாயத்து பண்ண உண்மையாகவே சண்டை போட்டுள்ள பரபரப்பு புரமோ வெளியாகி உள்ளது.
பசுமாட்டில் பால் கரக்கும் டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களை ஆக்டிவாக மாற்றி உள்ளார் பிக் பாஸ்.
தாமரை செல்வியும் பாவனியும் ஒருவரை ஒருவர் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வருவதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

பாவனியுடன் சண்டை
பிக் பாஸ் வீட்டின் அழகு பதுமையான பாவனிக்கும் அப்பாவி கிராமத்துப் பெண் தாமரைக்கும் இடையே தான் இன்றைய மூன்றாவது புரமோவில் செம சண்டை நடக்கிறது. ஏதோ பாட்டில் பஞ்சாயத்து பாத்ரூம் ஏரியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. யாருடைய காயினையாவது திருடி விட்டார்களா? இல்லை இதுவும் நிரூப்பின் வேலையா? என்பதை ஷோ பார்த்தால் சொல்ல முடியும்.

பொய் பேசுனா பிடிக்காது
தாமரையும் தான் இப்படி இப்படி வச்சிட்டு போறாங்க என பாவனி சொல்ல.. என்னைப் பற்றி தப்பா பேசாதே என்றும் பொய் பேசுனா எனக்கு பிடிக்காது என்றும் தாமரை செல்வி குரலை உசத்தி பாவனியுடன் சண்டை போட நான் எல்லாம் நிரூப்புடனே சண்டை போட்டவள் என பாவனியும் இறங்கி திட்டும் புரமோ ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

கையை ஓங்கி
வாய் சண்டை கையை ஓங்கி கை சண்டையாக மாறிவிடும் அளவுக்கு இன்றைய மூன்றாவது புரமோ அமைந்துள்ளது. தாமரை பாவனியை அறைய கையை ஓங்க.. உனக்கு மட்டும் தான் கை இருக்கா என தாமரையை அறைய பாவனியும் கை ஓங்க அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ் உடனே இருவரையும் பிரித்துக் கொண்டு செல்லும் அட்டகாசமான புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நம்பலாமா
புரமோவை பார்த்து விட்டு பொங்கி எழக் கூடாது என ரசிகர்களே முடிவெடுத்து விட்டார்கள். எப்படி அண்ணாத்த டிரைலர் நல்லா காட்டிட்டு படம் வேறு மாறி வந்திருக்கோ அதே போல பிக் பாஸ் ஷோவும் நாளுக்கு நாள் 'டல்' அடித்து வருகிறது. ஏற்கனவே மதுவுடன் தாமரை போட்ட பொய் சண்டை போலத்தான் இதுவும் இருக்குமா? என்கிற கேள்வியும் இந்த புரமோவை பார்த்த ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











