அசிங்கமா இல்லை.. நிரூப்பிடம் ஆவேசமாக சண்டைப் போடும் வருண்.. வின்னர், ரன்னர் ரெடியாகிட்டாங்க போல!

சென்னை: பிரியங்காவை 'லவுட் மவுத்'னு சொல்லிட்டு இந்த வருண் என்னப்பா இப்படி சத்தமாக சண்டை போடுறாரே என ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 எப்படியோ 37வது எபிசோடை நெருங்கி விட்டது. சீக்கிரமாவே 100வது நாளை முடிச்சுடுங்க என வெளியே ரசிகர்கள் கத்துவது உள்ளேயும் கேட்டு விட்டது போல வருணும் நிரூப்பும் அதை சொல்லியே சண்டை போடும் சரவெடியான புரமோ 2 வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஆரம்பத்தில் இப்படித் தான் இருக்கும் அப்புறம் நமத்துப் போன பட்டாசாக மாறிவிடும் இந்த சண்டை என்றும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

வருண் வாய்ஸ் வருது

வருண் வாய்ஸ் வருது

கேப்டன் பதவியை காயின் சக்தியுடன் பறித்துக் கொண்ட வருண் கொஞ்சம் கொஞ்சமாக தனது வாய்ஸை வெளியே கொண்டு வருகிறார். சும்மா இருந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து சீக்கிரம் வெளியேறி இருக்க வேண்டிய பெரிய இடத்துப் பிள்ளையை பக்குவமாக பேசி பயங்கர டெரர் ஆக மாற்றி உள்ளார் கமல்.

பாவனியுடன் சண்டை

பாவனியுடன் சண்டை

ஏற்கனவே சுருதி மற்றும் பாவனியிடம் பயங்கரமாக சத்தம் போட்டு கத்தி பேசிய வருண் தனக்குள் இருக்கும் சீறு பட வில்லனை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வருகிறார். பப்பியாக பக்குவமாக அக்‌ஷராவை இமை போல் காத்து வந்த ஜோஷ்வாவை இப்படி ஆக்ரோஷமாக ஆக்கிட்டாங்களே என்றும் நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த சீசன் பாலா

இந்த சீசன் பாலா

போன சீசனில் பாலாஜி முருகதாஸ் எப்படி டெரர் ஆக இருந்தாரோ அதே போல இந்த சீசனில் வருண் மாறி வருகிறார் என்றும் அவரது பேச்சும் அப்படியே பாலாஜி முருகதாஸை ஜெராக்ஸ் எடுத்தது போலவே இருப்பதாகவும் வசைகளை ரொம்ப சுலபமாக விட்டு விடுகிறார் எந்த ஒரு அணையும் போடாமல் என்றும் வருணுக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆண்கள் அணி

ஆண்கள் அணி

ஆண் போட்டியாளர்கள் எல்லாம் அன்பாக அண்ணன் தம்பி போல இருக்காங்க என்பதை அடிக்கடி வலியுறுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் கலகத்தை ஏற்படுத்தி விட்டார் கமல். இதுவரை ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணியில் பெரிய விரிசல் விட ஆரம்பித்துள்ளது. நாமினேஷனிலும் அது தெளிவாக எதிரொலித்தது.

வருணுக்கும் நிரூப்புக்கும் சண்டை

வருணுக்கும் நிரூப்புக்கும் சண்டை

ஏற்கனவே அபிநய்க்கும் நிரூப்புக்கும் சண்டை நேற்றைய எபிசோடில் நடந்த நிலையில், தற்போது வருணுக்கும் நிரூப்புக்கும் இடையே வெடித்த ஆக்ரோஷ சண்டையின் அதிரடியான புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அசிங்கமா இல்லை

அசிங்கமா இல்லை

பொம்மை டாஸ்க்கை கொடுத்து போரடிக்கப் போறாங்களே என நினைத்த ரசிகர்களுக்கு சூப்பர் ட்விஸ்ட்டாக வருணுக்கும் நிரூப்புக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டு பரபரப்பை கூட்டியுள்ளனர். இந்த கேம் ஆட விரும்பல என நிரூப் சொல்ல அசிங்கமா இல்லை புடிச்சு இழுத்துக்கிட்டு இருக்க நீ என வருண் பொங்க.. நீ யாரு எனக்கு சொல்றதுக்கு என நெருப்புடாவாக மாறியுள்ளார் நிரூப்.

வின்னர் ரன்னர்

வின்னர் ரன்னர்

போன சீசனில் இப்படித் தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்த பாலாவும் ஆரியும் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டைட்டில் வின்னராகவும் ரன்னராகவும் மாறினர். இந்நிலையில், இந்த சீசனுக்கான வின்னர் மற்றும் ரன்னராக நிரூப் மற்றும் வருண் ரெடியாகி வருகின்றனர் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X