அம்மானா சும்மா இல்லடா… குழந்தையாக மாறிய பிரியங்கா… பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் !

சென்னை : பிக்பாஸ் போட்டியாளர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த உறவினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 23rd December 2021 - Promo 2 |அம்மாவை பார்த்து கதறி அழுத Priyanka

இதில் அக்ஷரா, சிபி, நிரூப் மற்றும் ராஜுவின் குடும்பத்தினர் இதுவரை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இன்று வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் பிரியங்காவின் அம்மா வருவது போல் காட்சி வெளியாகி உள்ளது.

எதிர்பார்த்த டாஸ்க்

எதிர்பார்த்த டாஸ்க்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் Freeze Task ஆரம்பமாகி விட்டது. நீண்ட நாட்கள் கழித்து தனது குடும்ப உறவினர்களைப் பார்க்கும் போது அவர்கள் தன்னிலை மறந்து நெகிழ்ந்து போய்விட்டனர். குறிப்பாக அக்ஷரா அம்மா, அண்ணானை பார்த்ததும், அடம்பிடித்து அழும் குழந்தைபோலவே மாறி அண்ணன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டார்.

உருகிய ராஜு

உருகிய ராஜு

பிக் பாஸ் வீட்டில் இவர்களின் இந்த செயலை எல்லாம் பார்க்கும் போது நமக்கு கடுப்பாக இருந்தாலும் இவர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த பிரச்சினை வந்தாலும் அமைதியாக இயல்பாக இருக்கும் ராஜுவே தன் மனைவி மற்றும் அம்மாவை பார்த்து உருகி போய்விட்டார் என்றால், செல்லக்குட்டி அக்ஷரா எம்மாத்திரம்.

எல்கேஜி குழந்தை

எல்கேஜி குழந்தை

இந்நிலையில் இன்று பிரியங்காவின் அம்மா மற்றும் தம்பி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், பிரியங்காவின் அம்மா வரும் நேரத்தில் அனைவரையும் ஸ்லீப் மூடில் இருக்கிறார்கள், ஆராரோ ஆரிரரோ பாடலுடன் பிரியங்காவின் குடும்பத்தினர் வர, அம்மாவை பார்த்ததும் எல்கேஜி குழந்தை போல பிரியங்கா அழுதுகொண்டே ஓடிவருகிறார்.

ரசிகர்கள் சிரித்த மகிழ்ந்தனர்

ரசிகர்கள் சிரித்த மகிழ்ந்தனர்

இந்த காட்சி விக்ரமன் படக்காட்சிகளை மிஞ்சும் வகையில் இருந்தது என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்த காட்சியை பார்த்து உள்ளூற சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X