கமல் அருகே கெத்தா வந்து நின்ற சிபி.. ராஜுவுக்கு உரைக்கும்படி அப்படி சிபி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ. 12 லட்சம் பணத்துடன் வெளியேறிய சிபி சனிக்கிழமை எபிசோடில் கமல் அருகே கெத்தா வந்து நின்று பேசும் காட்சிகள் இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடைய போகிறது.

இந்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார்.

இன்னும் ஒரு வாரம்

இன்னும் ஒரு வாரம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்விகள் கொரோனா பரவல் காரணமாக எழுந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4ஐ போலவே அக்டோபர் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைய போகிறது. கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான ஷோவையும் வெற்றிகரமாக கமல் நடத்திக் கொடுத்திருக்கிறார்.

கமலுடன் சிபி

கமலுடன் சிபி

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ. 12 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி புவன சந்திரன் வார இறுதி நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து முறைப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வந்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

உரைக்கும் படி சொல்லுங்க

உரைக்கும் படி சொல்லுங்க

பிக் பாஸ் மேடைக்கு கோட்சூட் போட்டுக் கொண்டு கெத்தாக வந்த சிபியிடம் உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்களுக்கு என்ன குறை இருக்கு, என்ன நிறை இருக்கு என்பதை உரைக்கும் படி சொன்னால் நல்லா இருக்கும் என அழுத்தம் திருத்தமாக சொல்ல சும்மாவே வெளுத்து வாங்குவார் சிபி இப்போ கேட்கவா வேண்டும் என்பது போல மனதில் பட்டதை படார் என சொல்லி உள்ளார்.

கெத்தா விளையாடு நிரூப்

கெத்தா விளையாடு நிரூப்

ஃபைனல்ஸுக்கு போக வேண்டும் என நிரூப் விளையாடி கேம் நல்லாதான் இருந்தது. ஆனால், இன்னும் கொஞ்சம் உன் கேமை கெத்தா விளையாடினால் நல்லா இருக்கும் என உள்ளே இருக்கும் போது நிரூப்பை பார்த்து பயந்தாங்கோலி என சொல்லி அசால்ட் காட்டிய அதே தொனியுடனே வெளியே வந்தும் சிபி கூறியிருக்கிறார்.

ராஜு அதை மாத்திக்கோ

ராஜு அதை மாத்திக்கோ

பிரச்சனைகளை சரி செய்ய சமாதான முயற்சிக்கு அதிகளவு ராஜு ஒவ்வொரு நேரமும் மெனக்கெடுவான் அது எனக்குத் தெரியும். ஆனால், சொல்ல வரும் விஷயத்தை இன்னும் கொஞ்சம் ஓப்பனா அடிச்சு சொல்லு என தனது நண்பன் ராஜுவுக்கு சிபி சூப்பரான அட்வைஸை சொல்லி சென்றுள்ளார்.

Recommended Video

Oye MARRIED BACHELOR!!! | சீக்கிரம் வீட்டுக்கு வா Ciby Wife Post | Bigg Boss Tamil
அடிச்சிடுறேன்

அடிச்சிடுறேன்

எப்போதுமே வார்த்தை விளையாட்டுகளால் அசத்தி வரும் ராஜு ஜெயமோகன் மீது இதே குற்றச்சாட்டு பிக் பாஸ் வீட்டிலும் வெளியேவும் இருக்கிறது. கருத்தை பலமாக எடுத்து வைக்க வேண்டும் என்று இந்நிலையில், அதே விஷயத்தை சிபி சொல்ல சரி.. அடிச்சிடுறேன் என மீண்டும் தனது வார்த்தை விளையாட்டை பயன்படுத்தியுள்ள இரண்டாவது புரமோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X