அடுத்த ஃபைனலிஸ்ட் பிரியங்கா...ப்ரோமோவிலேயே அறிவித்த கமல்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இறுதி வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் வாரத்தில் பிக்பாஸ் ஃபினாலே நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க போகும் டாப் 5 போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Recommended Video
ஏற்கனவே டிக்கெட் டு ஃபினாலேவை வென்று அமீர் இறதிப் போட்டிக்கு சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து நிரூப்பும் ஃபைனலுக்கு சென்று விட்டார். நேற்று ராஜு சேவ் செய்யப்பட்டு, இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

வெளியேற போவது யார்
சிபி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டதால் மீதமுள்ள பிரியங்கா, பாவனி, தாமரை ஆகிய மூன்று பேரில் எந்த இருவர் ஃபைனல் வாரத்திற்குள் நுழைய போகிறார்கள், இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஃபைனலிஸ்ட் பிரியங்கா
இந்நிலையில் இன்றைய 98 ம் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்குள் செல்லும் அந்த கடைசி இரண்டு பேர் யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ப்ரோமோவிலேயே அடுத்த ஃபைனலிஸ்ட் பிரியங்கா என்பதை சொல்லி விட்டார் கமல்.

அடுத்த ஃபைனலிஸ்ட் யார்
இன்றைய ப்ரோமோவில், இவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஃபைனலிஸ்ட். பிரியங்கா என்கிறார். தொடர்ந்து டென்ஷனாக காத்திருக்கும் பாவனி, தாமரையிடம், நீங்கள் இருவருமே ஃபைனலிஸ்ட் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால் அவர்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என சொல்ல முடியாது என கையில் இருக்கும் கார்டை கமல் பார்ப்பதுடன் ப்ரோமோ நிறைவடைகிறது.

மக்கள் தீர்ப்புனு சொல்லாதீங்க
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, என்ன ஆண்டவரே பிரியங்காவை மட்டும் ப்ரோமோவிலேயே காப்பாற்றி விட்டீர்களே என கேட்டுள்ளனர். தமிழ் பிக்பாஸ் 5 மட்டும் தான் கன்டென்டே இல்லாம ஒரு வார எபிசோட்டை ஒளிபரப்பு பண்ண முடியும். என்ன வேணா சொல்லிக்கோங்க மக்கள் தீர்ப்புனு மட்டும் சொல்லாதிங்க கமல் சார்.

ஆண்டவர ஏன் கட்டி போட்டிருக்கீங்க
பாவம்ப்பா தாமரை. நிரூப்பை நம்பி 12 லட்சத்தை விட்டுட்டாங்க. தாமரை தான் இந்த வாரம் வெளியே போறாங்க. எவிக்ஷன், ஃபைனலிஸ்ட் எல்லாம் ஓரத்துல வையுங்க. அதென்னடா எங்க ஆண்டவர கட்டி போட்டி வச்சிருக்கீங்க டிரெசுங்கற பேருல என ப்ரோமோவை வைத்தே விஜய் டிவியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











