சஞ்சீவின் மனைவி இவர்தான்… அட இந்த சீரியல் நடிகையா?.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலக்கி வருகிறார். இவரது நடுநிலை தன்மை ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.
சஞ்சீவ் பற்றிய அவருடைய மனைவியும் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயத்தை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் சஞ்சீவ் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சஞ்சீவ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்துள்ளார் சஞ்சீவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் மாணவனாக நடித்த சிபியும் பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக உள்ளார்.

கடந்து வந்த பாதை
பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கடந்து வந்து பாதை குறித்து முன்பே கூறிவிட்ட நிலையில்,வைல்டு கார்டு மூலம் வீட்டிற்குள் வந்த சஞ்சீவ் தன் வாழ்க்கையில் சந்தித்த சுக துக்கங்களை கூறினார். அப்போது, அக்காதான் எனக்கு எல்லாமுமாக இருந்தார்கள் என்றார். அக்காவின் மரணத்திற்கு பிறகு அக்கா மகளுக்கு தான் தந்தையாக மாறி திருமணம் செய்து வைத்தாக உருக்கமுடன் பேசி இருந்தார்.

காதல் திருமணம்
மேலும், சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது, தனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பதாக கூறியிருந்தார். என் அக்காவின் மகளுக்கு என்மனைவி ப்ரீத்தி தாயாக இருந்தார் என்று உருக்கமாக பேசிகண்கலங்கி இருந்தார்.

திருமண போட்டோஸ்
சஞ்சீவின் பேச்சைத் தொடர்ந்து ரசிகர்கள் பலர் யார் அவருடைய மனைவி என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடி வருகின்றனர். ப்ரீத்தி கண்ணான கண்ணே, ஆண்டார் அழகர், மொம்மலாட்டம், பந்தம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இதையடுத்து இணையத்தில் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தியின் குடும்ப புகைப்படமும், அவர்களின் திருமண போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video

பிரபல நடிகை
மேலும், சஞ்சீவின் அக்கா சிந்து இணைந்த கைகள் திரைப்படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்தவர்கள் தான். இவர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஒரே சகோதரியான ஷியாமளாவின் மகன் மற்றும் மகள் ஆவார்.


Click it and Unblock the Notifications











