ராஜுபாய்… நீங்கள் கடைந்தெடுத்த தங்கம்...நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள் !

சென்னை : பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளிலிருந்து கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் கொண்டு சென்று கொண்டிருப்பதில் ராஜு ஒரு முக்கிய காரணம்.

எந்த சூழ்நிலைகளிலும் அவருடைய சுய கேரக்டரை விட்டு விலகி விடாமல் நிதானமாகவே விளையாடி வருகிறார்.

இதனால் தான் நாளுக்கு நாள் ராஜுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது

பிடித்தமான போட்டியாளர்

பிடித்தமான போட்டியாளர்

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கும் ராஜூவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் செய்யும் சின்ன சின்ன செயல்களைக்கூட தன்னுடைய பெருந்தன்மையை வெளிக்காட்டுவதாக அமைந்து வருகிறது. என்னதான் ஒருசில நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு ராஜுவின் மீது நெகட்டிவ் கமெண்ட்டுகளை எறிந்து வந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

புகழும் ரசிகர்கள்

புகழும் ரசிகர்கள்

இந்த சீசனில் தன்னுடைய விளையாட்டை ராஜு வித்தியாசமாகவே விளையாடி வருகிறார் என்று தான் நினைத்தோம் ஆனால் வித்தியாசமாக விளையாடவில்லை இவருடைய சுபாவமே இப்படித்தான் என்று ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

கண்ணீர் கதை

கண்ணீர் கதை

நேற்றைய நிகழ்ச்சியின் போது, அமீர் தன் வாழ்க்கையில் பட்ட துன்பத்தை கூறினார். குழந்தையாக இருக்கும் போதே அப்பாவை இழந்துவிட்டதாகவும், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த அமீர், 10ம் வகுப்பு படிக்கும் போது தனது தாயையும் இழந்துவிட்டு அனாதையாக இருந்ததாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது கறையாத நெஞ்சையும் கறைய வைத்தது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 22nd December 2021 - Promo 2 | அம்மாவை பார்த்து கதறி அழுத Raju
கடைந்தெடுத்த தங்கம்

கடைந்தெடுத்த தங்கம்

அமீர் பேசி முடித்த பின் அனைவரும் கட்டி பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள் . ஆனால் , ராஜூ மட்டும் நீண்ட நேரமாக அவரை கட்டிப்பிடித்து தேம்பி தேம்பி அழுதபடி ஆறுதல் கூறினார். இதற்கு முன்பு ராஜு எதற்காகவும் இப்படி கண் கலங்கியது இல்லை. தாமரை தன் கதையை கூறிய போது கூட இயல்பாகவே இருந்தார். அதேபோல , சின்னப்பொண்ணு கதை பிடிக்கவில்லை என்று அவருக்கு டிஸ் லைக் கொடுத்த ராஜு இப்போது அமீரின் கதையை கேட்டு அவருக்கு ஆறுதல் கூறியதை பார்த்த ரசிகர்கள், ராஜுபாய் நீங்கள் கடைந்தெடுத்த தங்கம் என்று பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X