இத்தனை மணிக்கு ஒளிபரப்புனா... எப்படிங்க பாக்குறது.. பிக்பாஸ் டைம்மிங்கிற்கு எழும் எதிர்ப்பு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாக உள்ளது.
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வைத்த கமல் அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

9 அல்லது 9.30 மணிக்கு
நேற்றைய நிகழ்ச்சி அறிமுக நிகழ்ச்சி என்பதால் மாலை 6 மணி முதல் 11 மணி வரை கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிலையில் வார எபிசோடுகள் வழக்கம் போல் 9 அல்லது 9.30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய புரமோவில் அறிவிப்பு
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நேரம் கடைசி வரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் அப்செட்
இதனை பார்த்து அப்செட் ஆகியுள்ளனர் ரசிகர்கள். காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் ஒரு மணி நேரம் என்றாலும் கூட 11 மணிக்கு தான் முடியும்.

அக்கறை இல்லையா?
இது நேரம் கடந்த நேரம் என கடுப்பாகியுள்ளனர் ரசிகர்கள். மக்களின் உடல் நலன் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு அக்கறை இல்லையா? இந்த நேரத்தில் ஒளிப்பரப்ப எப்படி அனுமதித்தார் என்று விமர்சித்து வருகின்றனர்.

வெளி நாடுகளில் உள்ளவர்கள்
வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்க்கும் தமிழர்களுக்கு இங்கு ஒளிபரப்பாகும் நேரத்தை காட்டிலும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ நிகழ்ச்சி தொடங்கும். முன்னதாக தொடங்கினால் பிரச்சனை இல்லை. பின்னதாக தொடங்கினால் அவர்கள் பார்ப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

நேரத்தை மாற்ற கோரிக்கை
இதனால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் நேரத்தை மாற்றி அறிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்கள் ஆரோக்கியம் ?
பிக்பாஸ் டைமிங்கை பார்த்த இந்த நெட்டிசன் இந்தியாவில் 10pm எங்களுக்கு 12.30am... ஒரு மனசாட்சி இருக்கா உங்களுக்கு... எங்களுக்கு காலைல வேலை வெட்டி இல்ல!!
7pm or 8pm இந்தியா டைம்க்கு வச்சா மக்கள் உருப்படுவாங்க.. கமல் சாருக்கு மக்கள் ஆரோக்கியத்தை பத்தி கவலையே இல்லை?? என கேட்டு பதிவிட்டுள்ளார்.

12 மணி ஆயிடும் போல
பிக்பாஸ் டைமிங்கை பார்த்த இந்த நெட்டிசன் ஷோ ஒரு மணி நேரம் பார்த்துட்டு அப்புறம் டிவிட்டர்ல அரை மணிநேம் சண்டை போட்டுட்டு தூங்க போகும் போது மணி 12 ஆயிடும் போலயே என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











