இந்த இடத்துக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன்.. பிடிச்சிருந்தா ஜெயிக்க வைங்க.. ஓட்டுக் கேட்கும் பிரியங்கா!
சென்னை: ராஜு மற்றும் பிரியங்கா தான் கிராண்ட் ஃபினாலேவில் மேடை ஏற போறாங்கன்னு தெரிந்தே இருவருக்கும் தனி புரமோக்களை போட்டு வருகிறார் பிக் பாஸ் எடிட்டர்.
Recommended Video
கோல்டன் மைக்கை கையில் கொடுத்து போட்டியாளர்களை தங்களுக்கான வாக்குகளை சேகரிக்கும் ரொம்ப கஷ்டமான டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
முதல் புரமோவில் பாவனி, நிரூப் மன்னிப்பு கேட்ட நிலையில், இரண்டாவது புரமோவில் ராஜு தனக்கான ஓட்டுக்காக பேசிய நிலையில், தற்போது பிரியங்கா ஓட்டுக் கேட்கும் புரமோ வெளியாகி உள்ளது.

தொகுப்பாளினி
கடந்த சீசனில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த நிலையில், இந்த சீசனில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை வந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பிரியங்காவின் பங்கு பெரிதளவில் இருந்ததை யாருமே மறக்க முடியாது.

ஸ்பீக்கர் அவுட்
பாசிட்டிவ் எனர்ஜியை அதிகம் பரப்புவேன் என சொல்லி வந்த பிரியங்கா எந்தளவுக்கு பாசிட்டிவிட்டியை பரப்புகிறாரோ அதை விட டபுள் மடங்கு சண்டை வந்தால் இறங்கி சவுண்ட் போட்டு டிவி ஸ்பீக்கர்கள் கிழியும் அளவுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் காட்டுக் கூச்சல் போட்டே இறுதி வாரம் வரை வந்து விட்டார்.

போட்டியே இல்லை
கடந்த சீசனில் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவருக்கும் கடைசி வரை விக்ரம் வேதா படம் ஓடிக் கொண்டிருந்தது போல ஒரு டஃப் ஆன போட்டி இருந்தது. ஆனால், இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா இடையே பலத்த மோதல் ஏதும் இல்லை. இருவரும் நண்பர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விளையாடி வருவது உள்ளே இருக்கும் நிரூப்பை போலவே ஏகப்பட்ட ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

கோல்டன் மைக் உடன் பிரியங்கா
மைக் இல்லாமலே தனது பேச்சால் பொளந்து கட்டும் பிரியங்காவிடம் கோல்டன் மைக்கை (அப்படித்தான் சொல்றாங்க) கையில் கொடுத்து பேச சொன்னால் சும்மாவா விடுவார். இந்த இடத்திற்கு வரவே ரொம்ப கஷ்டப்பட்டேன்.. என்னுடைய கரியர் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது எனக்கூறியுள்ளார்.

பிடிச்சா ஓட்டுப் போடுங்க
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் மற்றும் நிரூப் உள்ளே நுழைந்திருக்கும் நிலையில், ஒவ்வொருவரும் மைக் பிடித்து தங்களுக்கான ஓட்டு கேட்டு வருகின்றனர். பிரியங்கா தன்னை பற்றி பேசி முடித்த நிலையில், என்னை பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைங்க மக்களே என கேட்டுள்ள மூன்றாவது புரமோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











