Don't Miss!
- News
"மோடி ஜி.. இந்த மேட்டர் என்னாச்சு?"- 17 இடங்களில் திடீரென முளைத்த மர்ம பேனர்கள்.. யார் பார்த்த வேலை?
- Finance
ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle
உங்க உடல் எடையை குறைக்க இந்த விரத வழிமுறைகளை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம் தெரியுமா?
- Technology
"இது எல்லாமே ரொம்ப பெருமையா இருக்கு"- பிரமாண்ட ட்ரோன் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு!
- Sports
அஸ்வின் தான் ராஜஸ்தானின் பெரும் பிரச்சினையே.. 2 முக்கிய விஷயம்.. ஆதாரத்துடன் கூறிய மஞ்ச்ரேக்கர்!
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா... நிரூப்பிற்கு வித்தியாசமான பரிசளித்த கமல்… என்ன கிஃப்ட் தெரியுமா ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்து வருகிறது.
இதில் நிரூப்பிற்காக கமலஹாசன் வித்தியாசமான நினைவு பரிசை வழங்கி அவரை மகிழ்வித்தார்.
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!

விறுவிறுப்புடன்
கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பும் இந்த சீசனில் கொடுக்கப்பட்டது.

டைட்டில் வின்னர் யார்
பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது சற்று நேரத்தில் தெரியாவந்துவிடும். ராஜூமோகன் தான் பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ஆனார் என்ற இணையத்தில் உலாவந்த நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் சில மணி நேரங்களில் தெரியவந்துவிடும்.

நடிகரான ஆசை
இறுதிவரை சிறப்பாக விளையாடி 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நிரூப் முதல் நபராக வெளியேற்றப்பட்டார். அவரை நடினமாடியபடி வந்த டான்சர்கள் அவரின் கண்களை தட்டிவிட்டு நிரூப்பை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியேறினார். கமலிடம் பேசிய நிரூப், இந்த ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார். ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்பது எனது ஆசை இருப்பதாக கூறினார்.

கமலின் பரிசு
நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவனி என அனைவருக்கும் இன்று கமல் நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் போட்டியாளர்களுக்கு பிடித்த மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் படி பல பரிசு வழங்கினார். அதில், நிரூப்பிற்கு தொப்பியை பரிசாக வழங்கினார்.

வித்தியாசமான பரிசு
பிக் பாஸ் வீட்டில் எப்போதும் நீண்ட முடியுடன் இருந்த நிரூப்பிற்கு ஏற்றபடி தொப்பியை நினைவு பரிசாக அளித்தார். மேலும், இந்த பரிசு நீங்க நீண்ட முடி வைத்து இருக்கும் போது வாங்கியது. நீங்க இப்போது முடியை வெட்டி விட்டீர்கள் என்று கூறினார். கமலின் வித்தியாசமான பரிசை பார்த்து மகிழ்ந்தார் நிரூப் .