Don't Miss!
- Finance
ஜூலை 26 கடைசி.. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!
- Technology
ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!
- Automobiles
0001 மாதிரியான ஃபேன்சி நம்பரை வாங்கணுமா?.. இதோ ஃபேன்சி நம்பர் பிளேட்டை பெறுவதற்கான வழி முறைகள்!
- News
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு சரி! அதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!
- Lifestyle
இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..
- Sports
சிஎஸ்கேக்கு எதிராக வெறியோடு விளையாடியது ஏன்? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்.. திடீர் மாற்றம் ஏன்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 2வது ரன்னர் அப்பாக வெளியேறினார் பாவனி ரெட்டி.
கடந்த சீசனில் நடைபெற்றது போல முந்தய சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாருமே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இந்த முறை போட்டியாளர்களை அழைத்துச் செல்லவில்லை.
அதற்கு பதிலாக வேறு விதமாக ஒவ்வொரு போட்டியாளர்களாக எலிமினேட் செய்யப்பட்டனர்.
பழைய
சாதத்தை
பரிமாறும்
பிக்
பாஸ்..
மீண்டும்
மீண்டும்
பயண
வீடியோவா..
அட
போங்க
பாஸ்
முடியல!

5வது இடத்தில் நிரூப்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து நிரூப் நந்தகுமார் கண்ணைக் கட்டியபடியே வெளியேற்றப்பட்டார். டாப் 5 ஃபைனலிஸ்ட்டாக இடம்பெற்ற நிரூப் 5வது இடத்தில் வெளியேறினார்.

அமீருக்கு ஏமாற்றம்
அமீர் தான் அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளார் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நிரூப் வெளியேறிய நிலையில் 4வது இடத்தில் ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்து அமீர் வெளியேற்றப்பட்டார். தனது எலிமினேஷனை சற்றும் அமீர் எதிர்பார்க்காத நிலையில், பலத்த ஏமாற்றம் அடைந்தார்.

இரண்டாவது ரன்னர் அப்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அழகு பதுமையாக கலந்து கொண்ட பாவனி மொழி தடைகளை தாண்டி 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்து விட்டார். அபிநய் உடன் லவ் டிராக், அமீருடன் முத்த சர்ச்சை என ஏகப்பட்ட அப்ஸ் அண்ட் டவுன்ஸ்களை கடந்த பாவனி இளைஞர்களின் மிகப்பெரிய சப்போர்ட் உடன் 2வது ரன்னர் அப் ஆகி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் பைக்
ஒவ்வொரு வெளியேற்றத்தையும் வித்தியாசமான முறையில் இந்த சீசனில் நடத்தினர். மூன்றாவது நபராக பாவனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற 3 பைக்குகள் பிக் பாஸ் வீட்டுக்கே வந்தன. அதில், ஃபைனலிஸ்ட்டான பிரியங்கா, ராஜு மற்றும் பாவனி ஏறிய ரவுண்ட் அடித்தனர்.

பைக்கில் பிக்கப்
மூன்று பைக்குகள் ரவுண்ட் அடித்த நிலையில், ஒரு பைக்கில் பாவனியை பிக்கப் செய்த நபர் அப்படியே அவரை வெளியே கொண்டு சென்று விட்டார். கமல் முன்னிலையில், வந்து நின்ற பாவனியிடம் கை விரல் எப்படி இருக்கிறது என விசாரித்த கமல் அவரை பாராட்டியது பாவனி ஆர்மியனரை உற்சாகப்படுத்தியது.