உன்ன பிச்சு தின்ன போறேன் நானே... மதுமிதாவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் ராஜு... பிக்பாஸ் கலகல புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அபிஷேக், தாமரை செல்வி, வருண் ஆகியோர் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களில் தாமரை செல்வியின் கதை கலங்க வைப்பதாக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோவில் நிரூப், தான்தான் யாஷிகாவன் எக்ஸ் பாய் ஃபிரண்ட் என்று கூறினார்.

யாஷிகாவின் முன்னாள் காதலர்
மேலும் தனக்கு சினிமாவில் ஒரு வழியை காட்டியது யாஷிகா தான் என்று அவர் குறித்து பெருமையாக பேசினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியானது. இதில் எக்ஸ் மாடலான நாடியா சங், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

போலீஸ்கிட்ட அடி வாங்க வச்சாங்க
அதில் தனது அம்மாவே தன்னை போலீஸில் அடி வாங்க வைத்ததாக உருக்கமாக கூறினார். அதனாலேயே அவருடைய அம்மா மீது வெருப்பு வந்ததாக கூறியுள்ளார் நாடியா சங். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

தமிழ் கற்றுக் கொடுக்கும் அண்ணாச்சி
இதில் ஜெர்மன் மாடலான மதுமிதாவுக்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள். முதல் நபராக இமான் அண்ணாச்சி, கட்டிக்கிற மாமனுக்கு அத்தனையும் அத்துப்படி என்று பாட அதையே திரும்ப பாடுகிறார். அவரை தொடர்ந்து அடுத்த வரியை ராஜு பாடுகிறார்.

உன்ன பிச்சு திங்க போறேன் நானே
உட மாட்டேன் உன்னை நானே.. உன்ன பிச்சு திங்க போறேன் நானே என்று பாடுகிறார். ஆனால் இந்த வரிகள் மதுமிதாவின் வாயில் நுழையவில்லை. பின்னர் அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்க, மிரட்டலாக அந்த வரிகளை ட்ரான்ஸ்லேட் செய்கிறார் ராஜு.

ஜாலியாக ஏதாவது போடுங்கள்
இதனைக் கேட்ட சக ஹவுஸ்மேட்ஸ் கலகலவென சிரிக்கின்றனர். வெறும் அழுகாச்சி புரமோக்களுக்கும் காட்சிகளுக்கும் நடுவில் பிக்பாஸ் வீட்டில் இதுபோன்ற கலகலப்பான சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று ஜாலியாக ஏதாவது போடுங்கள் எப்போதும் அழுது கொண்டே இருப்பதை காட்டாதீர்கள் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











