பிக் பாஸ் தமிழ் 5 ஜெயில் செட் பற்றி லீக்கான ரகசியம்.. அந்த இடத்திலா அதை கொண்டு போய் வச்சிருக்காங்க?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் ஜெயில் செட் எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி நாளை பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளது.

இன்று அதன் படப்பிடிப்பு இன்னும் சற்று நேரத்தில் பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது.

இந்த சீசன் எப்படி இருக்கும்

இந்த சீசன் எப்படி இருக்கும்

பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ ஆரம்பமானதில் இருந்து இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக கடந்துள்ளது. ஆனால், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல தொலைக்காட்சி சேனல்களில் இருந்தும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள் ஆரம்பமாகி உள்ளதால் நெருக்கடி ரொம்பவே அதிகம். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் கிளப்பப் போகும் சண்டை மற்றும் சர்ச்சைகளை வைத்துத் தான் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்கும்.

பல பெயர்கள்

பல பெயர்கள்

இந்த சீசனில் ரம்யா கிருஷ்ணன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், நகுல், ஜிபி முத்து, ஷகிலாவின் மகள் மிலா என பல போட்டியாளர்கள் பெயர்கள் ஆரம்பத்தில் அடிபட்டன. ஆனால், ஒருவர் பின் ஒருவராக நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்கிற தகவல்களும் வெளியானது. பிக் பாஸ் ஜோடிகள் ஜட்ஜாக இருந்த ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்குவார் என்றும் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் வதந்திகள் கிளம்பின.

இந்த சீசனிலும் அது இல்லை

இந்த சீசனிலும் அது இல்லை

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனை பார்த்த ரசிகர்கள் ஓவியா, ரைசா வில்சன் போன்ற போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் நீராடியதை கண்டு ரசித்தனர். இரண்டாவது சீசனிலும் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா நீச்சல் குளத்தில் நீராடினர். ஆனால், அதற்கு பிறகு தண்ணி தட்டுப்பாடு காரணமாக நீச்சல் குளம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படாது என கமல் சொன்ன நிலையில், கடந்த சீசன் வரை நீச்சல் குளம் காலியாகவே இருக்கிறது. இந்நிலையில், இந்த சீசனிலும் நீச்சல் குளம் இல்லை என்கிற தகவல்களும் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன.

Recommended Video

Priyanka Mohan-ஐ Doctor Pressmeet -ல் வெச்சி செய்த Sivakarthikeyan | Doctor, Nelson Dilipkumar
பேஸ்மென்ட் ஜெயில்

பேஸ்மென்ட் ஜெயில்

கடந்த சீசனில் கண்ணாடி அறையாக ஜெயில் மாற்றப்பட்ட நிலையில், இந்த சீசனில் நீச்சல் குளத்தையே ஜெயில் செட்டாக மாற்றி உள்ளனர் என்றும் தகவல்கள் லீக்காகி உள்ளன. பேஸ்மென்ட் ஜெயிலாக நீச்சல் குளத்தையே மாற்றி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. நாளை கமல் பிக் பாஸ் வீட்டை சுற்றிக் காட்டும் போது இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரிந்து விடும்.

பல புதிய விஷயங்கள்

பல புதிய விஷயங்கள்

ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் வீட்டில் சின்ன சின்ன மாற்றங்களோடு கலர்ஃபுல்லாக காட்சியளிக்கும். இந்த சீசனில் பிக்பாஸ் வீடு புதிய வடிவமைப்போடு இன்னும் பிரம்மாண்டமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டின் டிசைனை மாற்றினால் தான் பார்வையாளர்களை முதலில் கவர முடியும் கன்ஃபெஷன் ரூம் எல்லாம் இந்த சீசனில் எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பாத்ரூமுக்கு பூட்டு போட்றாதீங்க

பாத்ரூமுக்கு பூட்டு போட்றாதீங்க

போன சீசனில் பாத்ரூம் மற்றும் ஒரு படுக்கை அறைக்கு பூட்டு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அது போல செய்து விட வேண்டாம் அவசரத்தை அடக்க முடியாது என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவுகளை போட்டு என்ன என்ன கட்டுப்பாடுகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் நாளை டிவி முன்பாக வந்து அமர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஓவியா வருவாரா

ஓவியா வருவாரா

பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் நடிகை ஓவியா, ரம்யா பாண்டியன் மற்றும் லாஸ்லியா உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், பிக் பாஸ் பிரம்மாண்ட துவக்க விழாவில் நடிகை ஓவியா கலந்து கொள்வாரா? என்கிற கேள்வியையும் ஓவியா ஆர்மியினர் வைத்து வருகின்றனர். ஆனால், புதிய போட்டியாளர்கள் வழக்கம் போல நடனமாடிய படியே வீட்டுக்கு வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X