பிரியங்காவின் அன்பு ஸ்டேட்டர்ஜி... குற்றம்சாட்டிய ஹவுஸ்மெட்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 91 நாட்கள் நிறைவடைந்து போட்டி சூடுபிடித்துள்ளது.
இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் கடைசி வரை போட்டியிலிருந்து அமீர் அந்த டிக்கெட்டை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில், அன்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா பிரியங்கா? என்ற கேள்வியை கமல்ஹாசன் எழுப்பினார்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று முடிந்தது. மற்ற 4 சீசன்களில் மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்க், சீசன் 5 ல் டாஸ்குகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. டாஸ்க் தொடங்கிய முதல் நாளிலிருந்து இணையத்தில் இதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள் தொடர்ந்தன. 5 சுற்றுகளாக நடந்து முடிந்த இந்த டாஸ்கில் கடைசியில் அமீர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்று விட்டார்.

ஊதி பெரிதாக்கும் பிரியங்கா
சின்ன விஷயத்தை பிரியங்கா ஊதி பெரிதாக்குகிறார் என்ற குற்றச்சாட்டை பல போட்டியாளர்கள் பிரியங்கா மீது கூறியது குறித்து கமல் கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும், உண்மையில் பிரியங்கா அப்படித்தான் இருக்கிறார். சில விஷயத்தை அமைதியாகவே விட்டுவிடலாம் ஆனால் அவர் அப்படி செய்யாமல் அதை ஊதி ஊதி பெரிய பிரச்சனை ஆக்குகிறார் என்றனர்.

குழப்பிய பிரியங்கா
அதேபோல, அன்பை ஒரு ஆயுதமாக்கி அதன் மூலம் இந்த போட்டியில் ஜெயிக்க பார்க்கிறார் என்றும் போட்டியாளர்கள் அவர் மீது குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த பிரியங்கா, நான் எப்போதும் வெளியிலும், சரி இங்கேயும் சரி அன்பை நான் அனைவருக்கும் கொடுப்பேன் என்றார். மேலும், என் அன்பை நான் ஆயுதமாக்கவில்லை அப்படி என் அன்பால் நான் ஜெயித்தாலும் பரவாயில்லை என்று வழக்கம் போல நிறைய பேசி ஆடியன்சை குழப்பினார்.

பிரியங்கா சேவ்
கமல் வந்ததும் வராததுமாக பல கிடுக்குபிடி கேள்விகளை பிரியங்கா மீது வைத்தார் .நேற்றும் பிரியங்கா தாமரையை அவமானப்படுத்தியது குறித்து வன்மையாக கண்டித்து இருந்தார். நேற்றை பிரியங்கா மற்றும் தாமரைக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வெறும் கண்டிப்புடனே நிறுத்திக்கொண்டார். மேலும், பிரியங்கா சேவ் செய்யப்படுவதாக அறிவித்தார் கமல்.


Click it and Unblock the Notifications











