நான் தப்பு பண்ணிட்டேன்…10 வருஷமா தம்பி கூட பேசல… மனம் வருந்திய நிரூப் !

சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே போனதும் தம்பி கூட பேசுவேன் என்று நிரூப் கூறியுள்ளார்.

பிரியங்காக எத்தனை முறை அன்பை பொழிந்தாலும், அதை உதரி தள்ளிவிட்டு அவரிடம் சண்டைக்கோழியாகவே நிரூப் இருந்துள்ளார். நிரூப்பின் செய்கையால் பலமுறை பிரியங்கா கண்ணீர் சிந்தி உள்ளார்.

இதனால் ,நிரூப் உண்மையில் கரடுமுரடான நபர் போலவே அனைவருக்கும் தெரிந்தார். ஆனால் உண்மையில் அவர் மென்மையானவர் என்பது நேற்றைய எபிசோடில் தெரிந்துள்ளது..

தம்பியிடம் பேசுவேன்

தம்பியிடம் பேசுவேன்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 93 நாட்களை கடந்துள்ளதால், போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து வாழ்த்து கூறிய பிக் பாஸ், நிரூப்பை அழைத்து வெளியில் போனதும் முதலில் என்ன செய்வீங்க என்றார். நான் வெளியில் போனதும் என் தம்பியை கட்டிப்பிடிப்பேன். கிட்டத்தட்ட 10, 15 வருஷமா நான் அவனிடம் பேசாமல் தப்பு பண்ணிவிட்டேன். வெளியில் போனதும் அவன்கிட்ட உங்காந்து பேசணும் என்றார்.

கற்றுக்கொண்ட பாடம்

கற்றுக்கொண்ட பாடம்

யாருனே தெரியாதவங்க இங்க வந்து, விளையாட்டு நிகழ்ச்சினு தெரிந்தும் அதை மறந்துவிட்டு, 2 வாரத்திற்குள் ஒன்றாக அன்பாக இருக்கிறார்கள், சண்டை போடுறாங்க அப்புறம் அதை மறந்துவிட்டு பேசுறாங்க இங்கிருந்து இந்த பாடத்தை நான் கற்றுக்கொண்டேன் என்று பேசினார்.

பெண் ரசிகைகள்

பெண் ரசிகைகள்

தெனாவட்டாக எப்போதும் திரியும் நிரூப் இன்று குழந்தை போல் பேசியது ரசிக்கும்படி இருந்தது. உண்மையில் நிரூப்பின் தீவிர ரசிகைகள் இதை ரசித்து இருப்பார்கள். நிச்சயம் அவருக்கு இந்த வாரம் எக்ஸ்ட்ரா வோட்டு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 5th January 2022 - Promo 1 | 3 லட்சம் இப்போ 7 லட்சமா, யார் பணப்பெட்டி எடுப்பாங்க?
ராஜுவின் நிதானம்

ராஜுவின் நிதானம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீடு கற்றுக்கொடுத்த பாடம் என்ற டாஸ்கின் போதும், தன் தம்பியிடம் பேசாமல் இருப்பது குறித்து நிரூப் பேசி இருந்தார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து ராஜுவின் நிதானத்தை கற்றுக் கொண்டேன் அது என்னிடம் இல்லாத ஒரு விஷயம். இதை இந்த வீட்டின் பாடமாக எடுத்துச்செல்வவேன் என கூறியிருந்தார் நிரூப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X