இது இண்டர்வெல் இல்ல.. இதுதான் உங்கள் எல்லோருக்கும் முதல் சீன்.. ராஜுவை பாராட்டிய கமல் ஹாசன்!

சென்னை: ராஜு கதை சொன்ன விதம் தனக்கு பிடித்திருந்ததாக கூறிய கமல் இந்த நிகழ்ச்சிதான் உங்களின் முதல் சீன் என்று கூறி பாராட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர்.

பிரியங்கா கூறிய ஸ்டோரி

பிரியங்கா கூறிய ஸ்டோரி

இந்நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் கூறிய கதைகள் குறித்து பேசினார் கமல்ஹாசன். அப்போது பிரியங்கா கூறிய கதை குறித்து பேசிய கமல், பிரியங்காவின் அப்பா ரயிலில் உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்ட போது அங்கிருந்த யாருமே அவருக்கு உதவி செய்யாமல் போனது குறித்து பேசினார்.

உதவி செய்யாமல் செல்பி எடுப்பார்கள்

உதவி செய்யாமல் செல்பி எடுப்பார்கள்

மேலும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற அவர், தன்னுடைய அரசியல் பயணத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் இருந்ததில்லை என்றும் சில பேர், விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் அப்போது அவருக்கு உதவி செய்யாமல் செல்பி எடுப்பார்கள் என்றும் கூறி தனது வேதனையை பதிவு செய்தார்.

ராஜு கதை சொன்ன விதம்

ராஜு கதை சொன்ன விதம்

மேலும் பிரியங்காவின் கதையில் இருந்து நாம் கற்றுக்கொண்ட் நீதி, இதுபோன்று இருக்கக்கூடாது என்பதுதான் என்றும் கூறினார் கமல். தொடர்ந்து ராஜுவின் கதை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜு கதை சொன்ன விதம் தனக்கு பிடித்ததாக கூறினார்.

இதுதான் உங்களின் முதல் சீன்

இதுதான் உங்களின் முதல் சீன்

மேலும் கதையில் இது இண்டர்வெல் என்று நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கமல், இதுதான் உங்களின் முதல் சீன் என்றார். மேலும் போட்டியாளர்கள் அனைவருக்குமே இந்த வீடும் இந்த நிகழ்ச்சியும்தான் முதல் சீன் என்ற கமல்.

சாண்டி சொன்ன கதை

சாண்டி சொன்ன கதை

இதன் பிறகு உங்கள் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும் என்றும் கமல்ஹாசன் கூறினார். மேலும் ராஜு கதை இனி வேற கதையாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் ராஜு கதை குறித்து பேசும் போது, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாண்டி சொன்ன கதையை நினைவு கூர்ந்த கமல் அவர் அப்போது கூறிய கதை தனக்கு ரொம்ப பிடித்ததாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X