நாட்டுப்புறமா? நாடகமா? என்ன கேள்வி இது.. சாட்டையை சுழற்றும் கமல்.. தடுமாறும் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பேசிய கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கடந்து வந்த பாதை டாஸ்க் குறித்தும் நாமினேஷன் புராசஸ் குறித்தும் பேசினார்.

மேலும் உங்களின் ஓட்டு இந்த வீட்டில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார் கமல்.

எப்படி பலூன் வெடித்தது?

எப்படி பலூன் வெடித்தது?

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் கேப்டன் டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்கள் குறித்து பேசுகிறார். குறிப்பாக சின்னப்பொண்ணுவின் பலூன் எக்காரணத்தினால் வெடித்தது என்று கேட்கிறார் கமல் ஹாசன்.

நாட்டுப்புற கலையா? நாடகக் கலையா?

நாட்டுப்புற கலையா? நாடகக் கலையா?

அதற்கு பதில் சொல்லும் சின்னப்பொண்ணு, நாட்டுபுற கலை ஜெயிக்குதா? இல்லை நாடகக் கலை ஜெயிக்குதா என்று பார்ப்போம் என தாமரை கேட்டதை சொல்லும் சின்னபொண்ணு, நான் உங்களை தவறாக சொல்லவில்லை என தாமரையிடம் விளக்கம் கொடுக்கிறார்.

அது தனிப்பிரிவே கிடையாது..

அது தனிப்பிரிவே கிடையாது..

தொடர்ந்து கமல் ஹாசனிடம் பேசும் சின்னப் பொண்ணு, தாமரை அப்படி கேட்டது தனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது, விளையாட்டுக்குதான் கேட்டார், ஆனாலும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்றார் சின்னப்பொண்ணு. இதைக் கேட்ட கமல், இது ஜெயிக்குமா அது ஜெயிக்குமான்னு.. அது தனிப்பிரிவே கிடையாது.

யார் ஜெயிச்சாலும் கலை ஜெயிக்கும்

யார் ஜெயிச்சாலும் கலை ஜெயிக்கும்

என்னைக் கேட்டால் இரண்டு பேருமே நாட்டுப்புறத்தில் இருந்து வந்தவர்கள் தானே... என்ற கமல், எது ஜெயித்தாலும் நாட்டுப்புறம் ஜெயிக்கும் என்றார். யார் ஜெயிச்சாலும் கலை ஜெயிக்கும் என்றார். ஆக பிக்பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்கள் கமலின் நாலேட்ஜ்க்கு சென்றுள்ளது.

பிரியங்காவை கேள்வி கேட்பாரா?

பிரியங்காவை கேள்வி கேட்பாரா?

புரமோவில் கேப்டன் டாஸ்க் குறித்து பேசும் கமல், அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்தும் விவாதிப்பார் என தெரிகிறது. மேலும் நேற்றைய எபிசோடில் நிரூப் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே விதிகளை மீறி எலிமினேஷன் குறித்து பேசியது பற்றியும் கமல் கேட்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X