உடம்பே மரத்துப்போச்சு... பெத்தவங்கதான் காரணம்.. கதறி அழும் நமீதா... கலங்க வைக்கும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

BIGG BOSS 5 Namitha பற்றி Sudha Mummy | # Closecall | Filmibeat Tamil

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் முதல் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்தப் பாதையை ரொம்பவே உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று இமான் அண்ணாச்சி

நேற்று இமான் அண்ணாச்சி

முதல் போட்டியாளராக இசைவாணி தனது கதையை பகிர்ந்தார். அவரை தொடர்ந்து சின்னப்பொண்ணு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிலையில், நேற்று இமான் அண்ணாச்சி, ஸ்ருதி ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்பாவுக்கும் தாத்தாவுக்கம் ஒரே வயசு

அப்பாவுக்கும் தாத்தாவுக்கம் ஒரே வயசு

இதில் இமான் அண்ணாச்சி தான் கடந்து வந்த பாதையை வேடிக்கையாக ஷேர் செய்தார். இதனை தொடர்ந்து மாடலான ஸ்ருதி தனது கதையை பகிர்ந்தார். தனது அப்பாவுக்கும் தனது அம்மாவின் அப்பாவுக்கும் ஒரே வயது என்றும் இதனால் தனது அப்பா தங்களுக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் கண்ணீருடன் பதிவு செய்தார் ஸ்ருதி.

துன்பங்களையும் அவமானங்களையும்

துன்பங்களையும் அவமானங்களையும்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து தான் திருநங்கையாக மாறிய கதையையும் அதனால் பட்ட துன்பங்களையும் அவமானங்களையும் கண்ணீர் மல்க கூறி கதறியுள்ளார்.

எங்கள் அம்மா சொல்லி கொடுத்தார்கள்

எங்கள் அம்மா சொல்லி கொடுத்தார்கள்

புரமோவில் நமிதா மாரிமுத்து பேசியிருப்பதாவது, யாரிடமாவது ஏதாவது குறை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என எங்கள் அம்மா சொல்லி கொடுத்தார்கள். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.

உடம்பே மரத்துப் போயிடுச்சு...

உடம்பே மரத்துப் போயிடுச்சு...

அடிஅடின்னு அவ்ளோ அடி அடிச்சாங்க.. அடி வாங்கி வாங்கி என் உடம்பே மரத்துப் போயிடுச்சு... இந்த சமுதாயத்துல திருநங்கைகளை எல்லாரும் பாலியல் தொழிலாளியாகவும் பிச்சைக்காரர்களாகவும் தான் பார்க்கிறார்கள். இது எல்லாத்துக்கும் காரணம், அவங்க பெத்தவங்க மட்டும்தான். வேற யாரும் இல்ல.

நாங்க எப்போவோ மாறிட்டோம்

நாங்க எப்போவோ மாறிட்டோம்

மாறுங்க மாறுங்கன்னு சொல்லாதீங்க.. முதல்ல நீங்க மாறுங்க... நாங்க எப்போவோ மாறிட்டோம் என கண்ணீருடன் கூறும் நமிதா மாரிமுத்து பெத்தவங்களுக்கும் பொறுப்பில்ல.. மத்தவங்களுக்கும் பொறுப்பில்ல.. என பாடியப்படியே கதறுகிறார் நமிதா மாரிமுத்து.

நமீதாவை கட்டியணைத்து ஆறுதல்

நமீதாவை கட்டியணைத்து ஆறுதல்

நமிதா மாரிமுத்துவின் கதையை கேட்டு இமான் அண்ணாச்சி, இசைவாணி உள்ளிட்ட போட்டியாளர்கள் கண்ணீர் விடுகின்றனர். சக போட்டியாளர்கள் அனைவரும் பர்ஸ்ட் அவுட்டான நமீதாவை கட்டியணைத்து ஆறுதல் கூறுகின்றனர். இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X