பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா... இதயத்தை கொடுத்தோமே.. கமல் அதிர்ச்சி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் அவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில்தான் திருநங்கை ஒருவர் பங்கேற்றார். திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

சாப்பாட்டில் விஷம்
இதில் பேசிய நமீதா மாரிமுத்து தான் திருநங்கையாக மாறியதும் தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் சந்தித்த துயரங்களை கூறினார். குடும்பத்தினரே தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்ததும் அடியாட்களை வைத்து அடித்து துன்புறுத்தியது என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

கண்ணீர்விட்ட ரசிகர்கள்
திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக இருப்பதற்கும் பிச்சை எடுப்பதற்கும் அவர்களின் பெற்றோர் தான் காரணம் என்று கண்ணீர்விட்டார். நமீதா பகிர்ந்த தகவல்கள் பலரையும் கண்கலங்க வைத்தது. பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் நமீதாவின் கதையை கேட்டு கண்ணீர் விட்டனர்.

ரூடாக பேசிய நமீதா
சமூக வலைதளங்களில் தங்களின் ஆதரவு நமீதாவுக்கே என பலரும் தெரிவித்து வந்த நிலையில் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். நேற்றைய எபிசோடில் தாமரை செல்வியிடம் மல்லுக்கட்டினார். தாமரை செல்வி வெள்ளந்தியாக பேசி சிரித்தற்கே டென்ஷன் ஆகி ரொம்பவே ரூடாக பேசினார் நமீதா மாரித்து.

தவிர்க்க முடியாத காரணங்களால்
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசனுடன் தொடங்கியது நிகழ்ச்சி. ஓபனிங்லேயே நமீதா மாரிமுத்து வெளியேறியது குறித்து பேசினார் பிக்பாஸ். அதாவது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

நமீதா மருத்துவமனையில் அனுமதி
அதற்கு முன்னதாகவே நமீதா வெளியேறிய தகவல் சமூக வலைதளம் மூலம் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நமீதா தானாக வெளியேறினாரா? அல்லது ஏதேனும் பிரச்சனையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் நமீதாவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மீண்டும் வருவார் நமீதா
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், நமீதா வெளியேறியது அதிர்ச்சியாக உள்ளது என்று கூறினார். அவரது சமூதாயத்தை பற்றி குரல் கொடுத்தவர், இதயத்தை கொடுத்தோம் வெளியேறியது வருத்தம் தான் என்றும் நடிகர் கமல் ஹாசன் கூறினார். இதனிடையே நமீதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்றும் தகவல் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











