குறும்படம் கேட்ட அபிஷேக்…கோபப்பட்டு கத்திய நமிதா... வைரல் ப்ரோமோ !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், ஆட்டம் பாட்டம், அரட்டை, கலகலப்பு , அழுகை, கலாட்டா என சுவாரசியமாக செல்கிறது.

இமான் அண்ணாச்சி , பிரியங்காவை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்.

மேடைநாடகக் கலைஞர், கானா பாடகி, நாட்டுப்புறப்பாடகி, ராப் பாடகி, மாடல் அழகிகள். அட இவங்கள எங்க இருந்துயா புடுச்சாங்க என இணையத்தில் நெட்டிசன்கள் மாறி மாறி கேட்டு வருகின்றனர்.

கண்ணீர் விட்ட ஸ்ருதி

கண்ணீர் விட்ட ஸ்ருதி

கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தையும் சந்தித்த இன்னல்களையும் கூறி வருகின்றனர். இதில் , இசைவாணி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாக கூறினார். அதேபோல சின்னப்பொண்ணு ஏழ்மையால் தனது குடும்பம் பட்ட கஷ்டத்தை கூறினார். மேலும் இமான் அண்ணாச்சி, ஸ்ருதி தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை கண்ணீர் விட்டு கூறினர்.

கதறி அழுத நமீதா

கதறி அழுத நமீதா

பிக் பாஸ் தினமும் 4 ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது. அதில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நமிதா மாரிமுத்து, கதறி அழுத படி தனது கதையை சொல்கிறார். இதனை கேட்டு ஹவுஸ்மேட்களும் கதறி அழுகிறார்கள். திருநங்கைகளான நாங்கள் மாறி விட்டோம், சமுதாயம் தான் மாற வேண்டும் என்ற நமீதாவின் பேச்சு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

2வது ப்ரோமோ

2வது ப்ரோமோ

இதைத் தொடர்ந்து வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், பாவனி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கதையை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். எனக்கு பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. வாழ்ந்தால் போதும் என்கிறார். அவருக்கு மதுமிதா ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கும் போது பிரியங்கா வந்து பாவனி ஏன் அழுகிறார் என்று கேட்கிறார்.

நான் சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க

நான் சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க

இதையடுத்து தற்போது 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், பேபி நான் சொன்னா யாருமே கேட்க மாட்டாங்க, டீயை குடிச்ச கிளாசை அப்படியே அங்க அங்க வைச்சிடுறாங்க நீ கொஞ்சம் சொல்லு என்கிறார் நமீதா மாரிமுத்து. உடனே பிரியாங்கா, டீ குடிச்ச கிளாசை சிங்க் கிட்ட வச்சா நல்ல இருக்கும் என்கிறார்.

குறும்படம் வேணும்

குறும்படம் வேணும்

உடனே அபிஷேக் ஏதோ சொல்ல...கடுப்பான நமீதா வெசல் வாஷிங் டீம் சிங்க்ல இருக்குற பாத்திரத்தை மட்டும்தான் இனிமே கழுவனும், வெளியில எங்கையாவது வச்சிட்டுபோனா கழுவக்கூடாது என்று கோவத்துடன் கத்துகிறார். உடனே அபிஷேக் ஏதோ சொல்ல , உடனே பிரியங்கா அப்போ நீ தான் வேலைய பண்ணியா என்று கேட்கிறார். இதனால் அபிஷேக் பிக் பாஸ் ஒரு குறும்படம் போடுங்க என்று சொல்கிறார். இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்தா நிச்சயமா என்டர்டைன்மெண்ட் இருக்கும் போல என்று பிக்பாஸ் பிரியர்கள் காத்து இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X