குரூப் இல்லைன்னு காட்டிக்கிறாங்களாம்.. நேர்மையா இருக்காங்களாம்.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ட்ரியோ குரூப்பை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் பிரியங்கா, அபிஷேக் மற்றும் நிரூப் ஆகிய மூன்று பேரும் தங்களுக்குள்ளேயே எதிர் எதிராக வாக்களிக்கின்றனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் குழம்பிப் போயுள்ளனர். புரமோவில் எடிட்டர் தனது வேலையை காட்டிவிட்டாரா அல்லது பிக்பாஸே பிரித்தாளும் வேலையை தொடங்கி விட்டாரா என கேள்வி என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்ல
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது எந்த விதமான ஸ்ட்ராட்டஜினே புரியலையே என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆனால் நல்லா பண்றீங்க நீங்க 3 பேரும் என நிரூப், பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். அதோடு, இதுவரைக்கும் இருந்த கூட்டணில நீங்க மூணு பேரும் வேற ரகம் என்றும், அதே சமயம் கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்லாம இருக்கீங்க.. என்றும் பதிவிட்டுள்ளார்.

சும்மா இருக்க விடாம
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பரவாயில்ல பரவாயில்ல.. வழக்கமா லக்ஸரி பட்ஜெட் டாஸ் முடிஞ்ச அப்புறம் ஹவுஸ்மேட்ஸ சும்மா இருக்க விடாம, சுமாரா இருந்தாலும் இது மாதிரி டாஸ்க் கொடுக்குறீங்க... நல்ல வேலை என பாராட்டியுள்ளார்.

தலைவலிதான் வருகிறது
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது உண்மையிலேயே குழப்பமாக உள்ளது. இதனை பார்த்து தலைவலிதான் வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

நேர்மையா இருக்காங்களாம்
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது பேசி வைத்து சொல்வது போல் உள்ளது என்றும் ஓ.. நேர்மையா இருக்காங்களாம்... ஸ்ப்பா... முடியல என்றும் கலாய்த்துள்ளார். மேலும் ஏதோ பிக்பாஸ் நிகழ்ச்சியை இவங்கதான் ரன் பண்ணுவது போல் பெருமை பேசினாங்க... சுத்தமா நம்ப முடியல என பதிவிட்டுள்ளார்.

மக்கள் நம்பி விட்டார்களாம்
புரமோவில் அபிஷேக், பிரியங்கா மற்றும் நிரூப் ஆகியோர் மாறி மாறி எதிரெதிராக வாக்களித்ததை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், குரூப்பா இல்லைன்னு காட்டிக் கொள்கிறார்களாம்.. ஒவ்வொருவரும் தனித்தனியாக விளையாடுகிறார்கள் என்று மக்கள் நம்ப வேண்டுமாம்...
மக்கள் நம்பி விட்டார்களாம்.. என்று மரண கலாய் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











