பிரியங்கா.. இமான் அண்ணாச்சி செம என்டர்டைன்மென்ட்… 3வது ப்ரோமோவால் குஷியான ஃபேன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் மானாவாரியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், இமான் அண்ணாச்சி மற்ற ஹவுஸ்மெட்டுகள் வீட்டில் எப்படி நடிந்து கொள்கிறார்கள் என்பதை நடித்து காட்டுகிறார்.
அதில், பிரியங்கா பிக் பாஸை பெருசு என அழைப்பதை வைத்து, இமான் பிரியங்காவை செமயாக கலாய்த்து உள்ளார். இந்த ப்ரோமோவால் குஷியான ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

முதல் ப்ரோமோ
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், சீரியல் நடிகை பவானி, தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகக் கதையை பகிர்ந்து கொள்கிறார். தனது முதல் கணவரின் தற்கொலை குறித்து பேசும் பாவனி ரெட்டி, தனது கணவர் இறந்தபோது தனக்கு அழுகை வரவில்லை என்றும் தனக்கு உண்மையில் கோபம் தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.

2வது ப்ரோமோ
இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரமோவில், பாத்ரூமில் பேசும் நமீதா மாரிமுத்து நாளைக்கு வீட்டில் பெரிய சண்டை இருக்கு என்கிறார். நான் விட மாட்டேன்.. நான் விட மாட்டேன் என்று கத்துகிறார். பிக் பாஸ் வீடு இன்னைக்கும் அழுகாச்சியாத்தான் இருக்குமோ என்று எண்ணிய ரசிகர்களுக்கு கலகலப்பான ப்ரோமோ வெளியானதால் குஷியாகி விட்டனர்.

காமெடியன்ஸ்
3வது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கலகலப்பான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த இரண்டு காமெடியன்களை வைத்தே இந்த சீசனை முடித்துவிடலாம்னு நினைக்கிறாரோ இந்த பெருசு? என பதிவிட்டுள்ளார்.

யோவ் பெருசு
அதே போல மற்றொரு நெட்டிசன்ஸ், யோவ் பெருசு!... எங்கேய்யா ஹீரோவும் வில்லனும் இன்னும் வெளியே வரலையே? என அவரும் பிக் பாஸை கலாய்த்து உள்ளார்.

2 பேரும் சூப்பர்
இந்த 3வது ப்ரோமோவை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், நான் இமான் அண்ணாச்சியின் ஃபேன் ஆகிவிட்டேன் என்றும், இமான் அண்ணாச்சி மற்றும் பிரியாங்கா 2 பேரும் சூப்பரா என்டர்டைன்மென்ட் பண்றாங்க என்று கூறியுள்ளார்.

ப்ரோமோவே நல்ல இல்ல
இந்த ப்ரோமோவை ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறி வரும் நிலையில், வர வர ப்ரோமோ பாக்குற இன்ட்ரெஸ்டே இல்லை...ஏன்னா ப்ரோமோவில் போடுற எந்த சீனையும் நீங்க டெலிகாஸ்ட் பண்றது இல்லை என்று கொஞ்சம் கோவமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

நல்ல இருக்கே
பிக் பாஸின் மற்றொரு தீவிர ரசிகர் ஒருவர், இதுங்க ரெண்டும் போட்டி போட்டு என்டர்டைன்மென்ட் பண்றாங்கா. பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி நல்ல இருக்கே என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











