சரிதான்.. அவரு மேல கோபம்தான் படவேண்டும்.. பாவனி ரெட்டிக்கு ஆதரவு கரம் நீட்டும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாவனி ரெட்டிக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 5 வீட்டின் முதல் சண்டை | Namitha உணர்வுகளை மதிக்காத Thamarai selvi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தனது வாழ்க்கையில் சந்தித்த வலிகளையும் மறக்க முடியாத நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தனது முதல் கணவர் தற்கொலை குறித்து பேசும் பாவனி ரெட்டி தனது கணவர் இறந்த போது தனக்கு அழுகை வரவில்லை என்றும் தன்னை இப்படி நடுவில் விட்டு சென்றதால் கோபம்தான் வந்தது என்றும் கண்ணீர் விட்டார்.

தனி ஆள் இல்லை

தனி ஆள் இல்லை

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் செய்தது சரிதான் என்றும் உங்களின் கோபம் சரியானது தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் நாங்கள் இருக்கிறோம், நீங்கள் தனி ஆள் இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

சோகக்கதையை நிறுத்திக்கோய்யா

சோகக்கதையை நிறுத்திக்கோய்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் பாவனி ரெட்டி கண்ணீர் விட்டு பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பெரிசு இத்தோட சோகக்கதையை நிறுத்திக்கோய்யா! என பிக்பாஸை சீண்டியுள்ளார்.

காமெடிதான் ஒரே வழி

காமெடிதான் ஒரே வழி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எலிமினேஷனிலிருந்து தப்பிக்க ஒரே வழின்னு விஜய் டீவி பிரியங்காவிடம் சொல்லி அனுப்பி இருக்காங்க! என்று பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன் காமெடி என்ற மீம்மை பகிர்ந்துள்ளார்.

உணர்ந்தவங்களுக்குதான் வலி தெரியும்

உணர்ந்தவங்களுக்குதான் வலி தெரியும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனியோட கணவர் தற்கொலை பண்ண விஷயம் தெரியும். அதுக்கு நிறைய பேரு நிறைய காரணங்கள் சொல்லலாம். அதோட உண்மையான வலி அதை உணரந்தவங்களுக்கு தான் தெரியும்.. சோ அவங்களோட பழைய வாழ்க்கை பத்தி யாரும் விமர்சிக்காம இருக்குறது நல்லது.. இங்க எப்படி இருக்காங்க அத மட்டும் பாருங்க.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அழகான சிரிப்புக்கு பின் அதிக வலி

அழகான சிரிப்புக்கு பின் அதிக வலி

மக்கள் பாவனி ரெட்டி ஏஞ்சலை போல் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர் தனது அழகான சிரிப்புக்கு பின் அதிக வலிகளையும் எமோஷன்களையும் வைத்துள்ளார் என்பது தெரிகிறது... தைரியமாக இரு மை ஸ்வீட் கேர்ள்... என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அரவணைக்கவும் அன்பான ரசிகர்கள் உண்டு

அரவணைக்கவும் அன்பான ரசிகர்கள் உண்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் பாவனி ரெட்டி தான் கடைசி வரை தனியாகதான் இருக்க வேண்டும் போல என கூறியதை கேட்ட இந்த ரசிகர், உன்னை ஆதரிக்கவும் அரவணைக்கவும் அன்பான ரசிகர்கள் உண்டு பாவனி என பதிவிட்டுள்ளார்.

ஏதாவது திருப்பம் வருதான்னு..

ஏதாவது திருப்பம் வருதான்னு..

புரமோவில் பாவனி ரெட்டி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க கடைசி வரைக்கும் இரண்டாவது திருமணம் செய்ய மாட்டீங்களா.. ஒரு டவுட்.. ஏன்னா இப்படி தான் ஒரு பொண்ணு அது பேரு (honey) என் புருசன் தான் உலகம் சொல்லிட்டு இப்ப பாத்தா என்னம்மா பர்பார்மன்ஸ் பண்ணுது
சரி இன்னும் வர வாரத்துல பார்ப்போம்.. ஏதாவது திருப்பம் வருதான்னு.. என்று கூறியுள்ளார்.

குற்ற உணர்ச்சியோடு வாழ்வது கஷ்டம்

குற்ற உணர்ச்சியோடு வாழ்வது கஷ்டம்

புரமோவில் பாவனி ரெட்டி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், அவருக்காக நீங்கள் அழக் கூடாது.. கோபம்தான் படணும். குற்ற உணர்ச்சியோடு வாழ்வது எவ்வளவு பெரிய கஷ்டம். எதைப் பத்தியும் யோசிக்காம போனவனை நினைச்சி லைஃப் புல்லா ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கணுமா? என்னடா லைஃப்... நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அழகான ஒரு நபரை சந்திப்பீர்கள் பாவனி.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X