சத்தம் போட்டு கத்தினால் உண்மையை மறைக்க முடியாது.. பிரியங்காவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோவிலும், பிரியங்கா, தாமரை இடையே காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது.
பல நேரங்களில் பிரியங்கா தாமரையை மட்டம் தட்டி பேசி வருகிறார். நேற்றைய டாஸ்கின் போது கூட, பிரியங்கா, பாவ்னி, அபிநய்யும் தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா போடுறீங்க என தாமரை செல்வியை அட்டாக் செய்து கோஷம் போட்டார்.
பிரிங்காவின் செயலால் கடுப்பான நெட்டிசன்ஸ் அவரை விளாசி வருகின்றனர்.

நரியங்கா
ஒரு இணையவாசி, இப்பதான் புரியுது பிரியங்கா ஏன் இப்படி நரியங்காவா இருக்கானு, பிரியங்கா & கோ வை தவிர வேற யாருக்கும் மக்கள் கொடுக்குற கை தட்டலை இவுங்களால ஜீரணிக்க முடியல, அதுலயும் குறிப்பா தாமரைக்கு, என்னைய எதிர்த்து ஒரு கிராமத்து பெண் பேசுறதா?நடக்குறதா?கேள்வி கேக்குறதா? என பதிவிட்டுள்ளார்

உன் அல்லக்கைகள்
ஒரு நெட்டிசன் ஏன்மா பிரியங்கா நீ பாவனி, அபினை இரண்டு பேர் கிட்டயும் சண்டை போடவே மாட்டியா... ஏன்னா அவங்க உன் அல்லக்கை அப்படித்தானே என பதிவிட்டுள்ளார்.

உண்மையை மறைக்க முடியாது
பிரியங்காவின் அடாவடி பேச்சால் கடுப்பான, ஒரு நெட்டிசன், ஆனாலும் பிரியங்கா மன தைரியத்தை பாராட்ட தான் செய்யணும். தன்னை பற்றி சுற்றி இருப்பவர்கள் அனைவரும் கழுவி ஊற்றினாலும் அது உண்மையாகவே இருந்தாலும் சத்தம் போட்டு அலறினால் அவர்கள் சொல்லும் விஷயத்தை மூடி மறைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கு பாருங்க. அது தான் சைக்கோத்தனம் என பதிவிட்டுள்ளார்.

தாமரை ஆன் ஃபயர்
தாமரையின் நலம் விரும்பியான ஒரு நெட்டிசன், பிரியங்கா மட்டும்தான் உசுப்பேத்துறது... தாமரை ஆன் ஃபயர், கிராமத்து பெண் என்றால் அவ்வளவு எளக்காரமா? நீ கலக்கு அக்கா.. என்ன வந்தாலும் பாத்துக்கலாம். என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா ப்ரோமோ
அனைத்து ப்ரோமோவிலும் பிரியங்காவே வருவதால் கடுப்பான ஒரு நெட்டிசன், டேய் பிக்பாஸ் எடிட்டர் பிரியங்கா இல்லாம புரோமோஷன் போக மாட்டீங்க போல..... போதும்ப்பா பிரியாங்காவும் பிக்பாஸ் புரோமோஷன்.என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











