என்னங்க ஆளுக்கு ஏத்த மாதிரி பேசுறீங்க? எதுக்கு இந்த பார்ஷியாலிட்டி? வறுபடும் பிக்பாஸ் அபிஷேக் ராஜா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் எரிச்சலாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் மட்டுமே தெரிந்த முகங்களாக உள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்கள் புது முகங்களாகவே உள்ளனர்.

வெறுப்பை சம்பாதித்து
அவர்களில் சிலர், வந்த வேகத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டனர். சிலர் வந்த வேகத்தில் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக யூட்யூபரான அபிஷேக் ராஜா பேசினாலே கடுப்பாகிறார்கள் ரசிகர்கள்.

ஃபேஸ் ரீடிங்
முதல் நாளிலேயே முகத்தை பார்த்து கேரக்டரை சொல்கிறேன் என சக போட்டியாளர்களுடன் கார்டன் ஏரியாவில் அமர்ந்து ஃபேஸ் ரீடிங் செய்தார். ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் அவர்களின் கேரக்டர் குறித்தும் பேசினார்.

என்ன பர்ஃபாமன்ஸ்...
பின்னர் திடீரென அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று கண்ணீர்விட்டார். தனது திருமணம் விவாகரத்தில் முடிந்தது குறித்தும் ரொம்பவே வேதனைப்பட்டு கதறினார் அபிஷேக் ராஜா. ஆனால் அதனை பார்த்த நெட்சடின்கள் என்ன பர்ஃபாமன்ஸ் என விமர்சித்தனர்.

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
ஏற்கனவே அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி பேசி விட்டு இப்போது பிக்பாஸ் வீட்டிற்கே சென்று விட்டீற்களே என கிண்டலடித்து வருகின்றனர்.

ஆளுக்கு ஏத்த மாதிரி
இந்நிலையில் சக போட்டியாளர்களிடம் அபிஷேக் நடந்து கொள்ளும் விதமும் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறார். குறிப்பாக வருண், ராஜு, நிரூப், சிபி, ஐக்கி பெர்ரி, அக்ஷரா, பாவனி ஆகியோரிடம் ஒரு மாதிரியாகவும் தாமரை செல்வி, இமான் அண்ணாச்சி, சின்னப் பொண்ணு, இசைவாணி, ஸ்ருதி ஆகியோரிடம் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்கிறார்.

சிலரை தாழ்த்தி
சில போட்டியாளர்களை தாழ்த்தியும் சில போட்டியாளர்களை உயர்த்தியும் பேசி வருகிறார் அபிஷேக் ராஜா. உதாரணத்துக்கு தாமரை செல்வியை பட்டையை போட்டு ஊரை ஏமாற்றுகிறார் என்று பேசினார். அதற்கு தாமரை செல்வி கோபப்பட்ட போதும் அப்படிதான் பேசுவேன் என்றாரே தவிர வருத்தம் தெரிவிக்க வில்லை.

பார்ட்ஷியாலிட்டி காட்டுவது எதற்கு?
அதே நேரத்தில் நடிகர் சிபியை அடிக்கடி ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் சிபியை ரஜினி காந்துடன் ஒப்பிட்டு பேசி வருவது ரஜினி ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. அபிஷேக்கின் இந்த இருமுகம் எதற்கு என்றும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் பார்ட்ஷியாலிட்டி காட்டுவது எதற்கு என்றும் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











